பயன்பாட்டு விதிமுறைகள்

PrintPrintEmail this PageEmail this Page

முன்னுரை

இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் லிமிடெட், அது வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல் ஆர்வத்துடன் உள்ள பொது மக்களுக்கு தகவலை வழங்குவதற்கும், அவர்களுடன் சிறந்த தகவல் தொடர்பை ஏற்படுத்தவும் இந்த இணையதளத்தை உருவாக்கி, பராமரித்து வருகிறது. நீங்கள் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இணங்கினால், இந்த வலைத் தளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுதல்.
இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக மதிப்பாய்வு செய்ய தயவு செய்து சில நிமிடங்களை ஒதுக்கவும். இந்த வலைத்தளத்தை அணுகுவது மற்றும் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கடைபிடிக்க ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் பின்பற்ற மற்றும் கட்டுப்படவில்லையெனில், இந்த வலைத் தளத்தில் இருந்து விஷயங்களை அணுகவோ, பயன்படுத்தவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ முடியாது.

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறலாம்
எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமலும், எந்த நேரத்திலும் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை புதுப்பிக்க அல்லது மாற்றும் உரிமையை இப்கோ-டோக்கியோ கொண்டுள்ளது. அத்தகைய மாற்றத்தைத் தொடர்ந்து இந்த வலைத் தளத்தை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம், மாற்றப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பின்பற்ற மற்றும் கட்டுப்பட்டிருக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த காரணத்திற்காக, நீங்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மறுபரிசீலனை செய்யும்படி நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கடந்த 2005 செப்டம்பர் 25 அன்று திருத்தப்பட்டன.

பதிப்புரிமை அறிவிப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட உரிமம்
இந்த தளத்தில் ("உள்ளடக்கம்") நீங்கள் பார்க்கும், பார்க்கும் அல்லது கேட்கும் அனைத்தும், உதாரணமாக உரை, கோப்பகங்கள், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், கிராபிக்ஸ், ஆடியோ கிளிப்புகள், வீடியோ காட்சிகள் மற்றும் ஆடியோ வீடியோ காட்சிகள் உள்ளிட்ட அனைத்தும், இந்திய சட்டங்களின் மற்றும் சர்வதேச பதிப்புரிமை சட்டங்கள் மற்றும் ஒப்பந்த விதிமுறைகளின் கீழ் பதிப்புரிமை பெற்றது. உள்ளடக்கத்தின் பதிப்புரிமை, இப்கோ-டோக்கியோ பொது காப்பீடு ஸ்தாபனம் லிமிடெட் அல்லது அதன் ஏதேனும் துணை நிறுவனங்கள் அல்லது இப்கோ-டோக்கியோவிற்கு தங்கள் உள்ளடக்கங்களை உரிமம் கொடுத்த ஏதேனும் மூன்றாம் தரப்பினருக்கு சொந்தமானது. இந்த தளத்தின் முழு உள்ளடக்கமும் இந்தியச் சட்டம் மற்றும் சர்வதேச பதிப்புரிமை மற்றும் உடன்படிக்கைகள் ஆகியவற்றின் கீழ் ஒரு கூட்டுப் பணியாக பதிப்புரிமை பெற்றது. உள்ளடக்கம் தேர்வு, ஒருங்கிணைப்பு, சீரமைப்பு மற்றும் விரிவாக்கம் பதிப்புரிமை இப்கோ-டோக்கியோவிற்கு சொந்தமானது.

இந்த தளத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளடக்க பகுதிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், சேமிக்கலாம், அச்சிடலாம் மற்றும் நகலெடுக்கலாம். எனினும் நீங்கள்:

நீங்கள் பதிவிறக்கிய உள்ளடக்கத்தை தனிப்பட்ட அல்லது வணிகரீதியல்லாத அல்லது இப்கோ-டோக்கியோவுடன் மேலும் உங்கள் வர்த்தக ஒப்பந்தங்களை தொடர மட்டுமே பயன்படுத்த முடியும்.

இப்கோ-டோக்கியோவிடம் எழுத்துபூர்வமாக முன் ஒப்புதல் பெறாமல், வேறு எந்த இணையதளத்திலும் உள்ளடக்கத்தின் எந்த பகுதியையும் பிரசுரிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது.

இப்கோ-டோக்கியோவிடம் எழுத்துபூர்வமாக முன் ஒப்புதல் பெறாமல்,உள்ளடக்கத்தின் எந்த பகுதியையும் பிற ஊடகங்களில் பிரசுரிக்கவோ அல்லது ஒளிபரப்பவோ கூடாது.

எந்த விதத்திலும் உள்ளடக்கத்தை மாற்றவோ அல்லது திருத்தவோ அல்லது ஏதேனும் பதிப்புரிமை அல்லது முத்திரை அறிவிப்புகள் அல்லது ரகசிய அறிவிப்புகளை அழிக்கவோ அல்லது திருத்தவோ கூடாது.

Nஇந்த தளத்தில் இருந்து உள்ளடக்கத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்யும்போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட உள்ளடக்கத்தின் உரிமை, தலைமை, அல்லது ஆர்வம் போன்ற எதுவும் உங்களுக்கு மாற்றப்படாது.  இப்கோ-டோக்கியோ இந்த தளத்திலிருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்யும் அனைத்து உள்ளடக்கத்திற்கும் அறிவுசார் சொத்துரிமைகளை பெற்று வைத்துள்ளது.

மேலே குறிப்பிட்டிருப்பது போல வெளிப்படையாக கூறப்பட்டாலன்றி , இஃப்கோ - டோக்கியோவிடம் எழுத்துபூர்வமாக முன் ஒப்புதல் பெறாமல், இந்த தளத்தின் அனைத்து அல்லது உள்ளடக்கத்தின் ஏதேனும் பகுதியை நீங்கள் நகலெடுக்கவோ, பதிவிறக்கவோ, அச்சிடவோ, வெளியிடவோ, காட்சிப்படுத்தவோ, செயலாக்கவோ, விநியோகிக்கவோ, அனுப்பவோ, பரிமாற்றவோ, மொழிபெயர்க்கவோ, மாற்றவோ, சேர்க்கவோ, புதுப்பிக்கவோ, தொகுக்கவோ, சுருக்கவோ அல்லது வேறு ஏதேனும் வழியில் மாற்றவோ அல்லது தழுவவோ கூடாது.

வர்த்தக முத்திரை அறிவிப்பு
இந்த இணைய தளத்தில் காட்டப்படும் அனைத்து வர்த்தக சின்னங்கள், சேவை குறிகள் மற்றும் சின்னங்களும் ("வர்த்தக முத்திரைகள்"), இப்கோ-டோக்கியோ அல்லது அதன் ஏதேனும் துணை நிறுவனங்கள் அல்லது இப்கோ-டோக்கியோவிற்கு தங்கள் உள்ளடக்கங்களை உரிமம் கொடுத்த ஏதேனும் மூன்றாம் தரப்பினரின் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வர்த்தக முத்திரைகளாகும். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் வெளிப்படையாக கூறப்பட்டாலன்றி, இப்கோ- டோக்கியோவிடம் எழுத்துபூர்வமாக முன் ஒப்புதல் பெறாமல், எந்தவொரு வணிகச்முத்திரையையும் நீங்கள் மறுதயாரிப்பு செய்யவோ, காட்சிக்கு வைக்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது. இந்த இணையதளத்தின் செயல்பாடுகளை ஏதேனும் வழியில் பாதிக்கவோ/குறிக்கிடவோ அல்லது பாதிக்க/குறுக்கிட முயற்சி செய்யவோ மாட்டேன் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

பரிந்துரைக்கப்படாத ஆலோசனைகள்
இஃப்கோ - டோக்கியோ இந்த வலைதளத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையம் வரவேற்கிறது. இந்த வலைதளத்தின் மூலம் இஃப்கோ - டோக்கியோவிற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள், யோசனைகள், கேள்விகள், வடிவமைப்புகள் மற்றும் இது போன்ற அனைத்து தகவல்களும் மற்றும் வாதப்பொருள்களும், ரகசியமற்ற மற்ற தனியுரிமையற்றதாக கருதப்படும். இந்த காரணத்திற்காக, நீங்கள் எங்களிடம் உள்ளிட்ட விரும்பாத ஏதேனும் இரகசிய தகவல் அல்லது தயாரிப்பு கருத்துக்கள், கணினி குறியீடு, அல்லது அசல் கலைப்பணி உள்ளிட்ட அசல் படைப்பு பொருட்கள் போன்ற ஏதேனும் தகவல்கள் அல்லது வாதப்பொருட்களை எங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வலைத்தளத்தின் மூலம் இப்கோ-டோக்கியோவிற்கு தகவல்கள் மற்றும் வாதப்பொருள்களை சமர்ப்பிப்பதன் மூலம், நீங்கள் சமர்ப்பிக்கும் தகவல்கள் மற்றும் வாதப்பொருள்களின் உலகளாவிய உரிமைகள், அனைத்து பதிப்புரிமை மற்றும் பிற அறிவுசார் சொத்து உரிமைகளின் தலைமை மற்றும் ஆர்வம் போன்றவற்றை இப்கோ-டோக்கியோவிற்கு இலவசமாக நியமிக்கிறீர்கள். இப்கோ-டோக்கியோ, நீங்கள் இந்த வலைதளத்தின் மூலம் சமர்ப்பிக்கும் தகவல்கள் மற்றும் வாதப்பொருள்களை எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் மற்றும் உங்களுக்கு எந்தவகையிலும் ஈடுசெய்யாமலும் பயன்படுத்துவதற்கு உரிமை கொண்டுள்ளது.

உலகளவில் கிடைக்கக்கூடியவை
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் உள்ளன, சில காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் நடைமுறை / சேவைகள் சில நாடுகளில் கிடைக்கின்றன, சில நாடுகளில் கிடைப்பது இல்லை. இந்த தளத்தில் உங்கள் நாட்டில் கிடைக்காத அல்லது அறிவிக்கப்படாத இப்கோ-டோக்கியோ தயாரிப்புகள், திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கான குறிப்புகள் அல்லது மறு குறிப்புகள் உள்ளன. இந்த குறிப்புகள் இப்கோ-டோக்கியோ உங்கள் நாட்டில் இத்தகைய தயாரிப்புகள், திட்டங்கள் அல்லது சேவைகளை அறிவிக்க விரும்புகிறது என்பதைக் குறிக்கவில்லை. உங்களுக்கு கிடைக்கப்பெறும் தயாரிப்புகள், திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றி உங்களுக்கு கேள்விகள் இருந்தால், இப்கோ-டோக்கியோவை தொடர்பு கொள்ளவும்.

பொறுப்பிற்கான வரம்பு
நீங்கள் இந்த வலைத்தளத்தை உங்கள் சொந்த வருவிளைவின் பொறுப்பை ஏற்று பயன்படுத்துகிறீர்கள். எந்த சூழ்நிலையிலும், இந்த வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ள ஏதேனும் தகவலை பயனப்டுத்துவதன் தொடர்பாக அல்லது பயன்படுத்துவதினால் ஏற்படும் நேரடி அல்லது மறைமுக இழப்பு அல்லது சேதம் அல்லது இந்த வலைத்தளத்தில் உள்ள ஏதேனும் தகவலை பயன்படுத்தமுடியாமை அல்லது சார்ந்து இருப்பதினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதங்களுக்கு இப்கோ-டோக்கியோவோ, அதன் துணை நிறுவனங்களோ, அல்லது சம்பந்தப்பட்ட இயக்குநர்களோ, அதிகாரிகளோ, ஊழியர்களோ அல்லது முகவர்களோ பொறுப்பாக மாட்டார்கள். இது பொறுப்பிற்கான ஒரு விரிவான வரையறையாகும். இது நேரடி அல்லது வெளிப்படையான, பொதுவான, சிறப்பான, தற்செயலான, ஒன்றின் விளைவாக, பிரத்யேக அல்லது வரம்பில்லாத, தரவு, வருவாய் அல்லது இலாப இழப்பு உள்ளிட்ட வேறு வகையான, அனைத்து இழப்புகளும் மற்றும் சேதங்களும் இவற்றுக்குப்பொருந்தும். இந்த சாட்டியுரைக்கப்பட்ட பொறுப்பு, ஒப்பந்தம், அலட்சியம், குற்றம், கடுமையான பொறுப்பு அல்லது வேறு ஏதேனும் அடிப்படையை சார்ந்து இருந்தாலும், மற்றும் இப்கோ-டோக்கியோவின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளோ அல்லது அதன் துணை நிறுவனங்களோ இத்தகைய சேதங்களை பற்றி அறிவுரை வழங்கியிருந்தாலோ அல்லது சேதங்கள் சாத்தியக்கூறு பற்றி தெரிந்தால் கூட, இந்த பொறுப்பிற்கான வரம்புகள் பயன்படுத்தப்படும்.

சில மாநிலங்கள் மேலே வழங்கப்பட்டுள்ள பொறுப்பின் வரம்புகளை அனுமதிக்காது, ஆதலால் இந்த பொறுப்பிற்கான வரம்புகள் உங்களுக்கு பொருந்தாமல் இருக்கலாம். ஏதேனும் காரணத்திற்காக இந்த பொறுப்பிற்கான வரம்பில் ஏதேனும் பகுதி தவறானது அல்லது செயல்படுத்த முடியாதது என்பதை நீங்கள் கண்டறிந்தால், பொறுப்பிற்கான அத்தகைய சூழ்நிலைகளில், இப்கோ-டோக்கியோ மற்றும் அதன் துணை நிறுவனங்களின் ஒன்றிணைக்கப்பட்ட பொறுப்பு, வேறு ஏதேனும் வரம்பிற்கு உட்பட்டிருந்தால், நூறு ரூபாய்க்கு (ரூ .100.00). மிகாமல் இருக்க வேண்டும்.

ஆளுமைச்சட்டம் மற்றும் அதிகார வரம்பு
இந்த வலைத் தளம் இப்கோ-டோக்கியோ நிறுவனம் இந்தியாவிற்குள் அதன் அலுவலகங்களில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த வலைத்தளம் தொடர்பான அல்லது அதன் பயன்பாடு தொடர்பான ஏதேனும் கோரிக்கைகள், இந்திய சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது.

முழு ஒப்பந்தம்
இந்த இணையதளத்தை அணுகுதல் மற்றும் / அல்லது பயன்பாடு குறித்த உங்கள் மற்றும் இப்கோ- டோக்கியோவின் முழு ஒப்பந்தத்தை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.


Download Motor Policy

Feedback