மற்ற காப்பீட்டு கூற்றுகள்

PrintPrintEmail this PageEmail this Page

தனிநபர் விபத்து காப்பீடு இழப்பீடுகள்

 • காப்பீட்டு நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தல் வேண்டும்.
 • விபத்தினால் மரணம் ஏற்பட்டால்,   இழப்பீடு தொகையானது காப்பீடு செய்யப்பட்டவரின் சட்டபூர்வ நியமனதாரர் / முன்மொழியப்பட்டவருக்கு வழங்கப்படும். பாலிசிதாரர் நியமனதாரரின் பெயரை வழங்கவில்லையெனில், சட்ட நீதிமன்றத்தில் இருந்து வாரிசுதாரர் சான்றிதழ் அவசியம்.

பிற இழப்பீடுகளை பொறுத்த வரையில், காப்பீட்டு நிறுவனம் பாலிசிதாரரை ஒரு நிபுணரின் மூலம் சோதனை செய்யலாம் அல்லது தேவைப்பட்டால் மருத்துவ குழுவிற்கு இந்த விஷயத்தை பரிந்துரை செய்யலாம், இதற்கான செலவு காப்பீட்டு நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும்.

தீ விபத்து / தொழிற்சாலை(IAR) பாலிசி இழப்பீடுகள்

 • முதலாவதாக பாலிசிதாரர் இழப்பை குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
 • தீயணைப்பு படைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்
 • கலவர கும்பல், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், மூன்றாம் நபர்கள் அல்லது பயங்கரவாததினால் ஏற்படும் சேதம் ஆகியவற்றால் தீ விபத்து ஏற்பட்டால் காவல் துறையினரிடம் புகார் பதிவு செய்யுங்கள்.
 • எக்காரணத்தைக்கொண்டும், 24 மணி நேரத்திற்கு மிகாமல், முடிந்தவரை விரைவாக காப்பீட்டு நிறுவனத்தினருக்கு தகவல் தெரிவியுங்கள்.
 • காப்பீடு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டாளருக்கு தகுந்த தகவல்கள் அளித்து ஒத்துழைப்பு கொடுங்கள்.
 • சூறாவளி, வெள்ளம் மற்றும் வெள்ளம் காரணமாக இழப்பு ஏற்பட்டால் அதை பற்றிய வானிலை அறிக்கை பெறவும்
 • காப்பீடு 'மறுநிதியளிப்பு அடிப்படையில்' இருந்தால், பழுதுபார்த்து/சேதமடைந்த பொருட்களை மாற்றிய பிறகு அதற்கான ரசீதுகளை இழப்பீடு தொகை பெறுவதற்காக சமர்ப்பித்த பிறகே, கோரிக்கை தீர்க்கப்படும்.

களவு இழப்பீடுகள்/ பணம் காப்பீடு/ ஊழியர் நேர்மையின்மை(Fidelity)

 • காவல் துறையினரிடம் உடனடியாக புகார் தெரிவித்து மற்றும் பொருட்களை கண்டறியமுடியவில்லை என்ற தடமறியா சான்றிதழை(NTC) பெறவும்.
 • முடிந்தவரை விரைவாக காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்கவும்.
 • காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும் பட்சத்தில் இழப்பீடாக கொடுத்த பணத்தை திரும்ப பெற காப்பீட்டு நிறுவனம் அந்த பொருளின் மதிப்பிற்கேற்ப முத்திரை இடப்பெற்ற காகிதத்தில் அந்த பொருளளுக்கான உரிமையை காப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளும்
 • காவல் துறையினரிடமிருந்து இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
 • இழப்பு ஏற்பட்ட நாளில் இழப்பின் மதிப்பினை உறுதி படுத்தும் விதமான முழுமையான கணக்கு ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் ஆகியவைகளை பாலிசிதாரர் மதிப்பீட்டாளரிடம் வழங்கவேண்டும்

இயந்திரம் பழுதடைதல்

 • காப்பீட்டு நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும்.
 • இழப்பீடு விபரம் மற்றும் பழுதுபார்ப்பு மதிப்பீடு ஆகிவற்றை காப்பீடு நிறுவனத்திடம் ஆய்விற்கு ஏற்பாடு செய்வதற்காக தாக்கல் செய்யப்பட வேண்டும்.
 • பகுதி இழப்புகள் என்றால், தேய்மானத்திற்கு எந்த தொகையும் விதிக்கப்படாது ஆனால் பொருட்கள் இன்றைய மாற்றத்தக்க மதிப்புக்கு காப்பீடு செய்யப்படவில்லை எனில், குறைவாக காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அதன் இழப்பீடு தொகை விகிதாசாரமாக குறைக்கப்படும். தேய்மானம் முழு இழப்பு கோரிக்கைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
 • ஒரு உபகரணம் பகுதி சேதமடைந்திருந்தால், அதனை பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் (காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் பெற்று) சரி செய்யப்பட வேண்டும் இல்லையெனில் மேற்படி ஏற்படும் இழப்புகள் சேர்த்துக்கொள்ளப்படாது.

மின்னணு சாதனங்கள்

 • காப்பீட்டு நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
 • இழப்பீடு விபரம் மற்றும் பழுதுபார்ப்பு மதிப்பீடு ஆகிவற்றை காப்பீடு நிறுவனத்திடம் ஆய்விற்கு ஏற்பாடு செய்வதற்காக தாக்கல் செய்யப்பட வேண்டும்.
 • வரையறுக்கப்பட்ட கால அளவிலான பாகங்களை தவிர மற்ற பாகங்களுக்கு கழித்தம் இல்லாமல் இழப்பீடு வழங்கப்படும் , ஆனால் அதில் இழப்பு மீட்டெடுத்தலின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ள படும்
 • ஒரு உபகரணம் பகுதி சேதமடைந்திருந்தால், அதனை பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் (காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் பெற்று) சரி செய்யப்பட வேண்டும் இல்லையெனில் மேற்படி ஏற்படும் இழப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

போக்குவரத்தில் இருக்கும் வீட்டுஉபயோக பொருட்கள்

 • சேதமானது போக்குவரத்தின் போது ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் எழும் பாதச்சத்தில் பொருட்களின் விநியோகமானது திறந்தவெளியில் நடத்தப்படவேண்டும் மேலும் அதற்கான சான்றிதழ் பெற படவேண்டும்.
 • போக்குவரத்தின் போது ஏற்படும் இழப்பு /சேதாரங்களுக்கு ,போக்குவரத்து நிறுவனத்திற்கு எதிராக இழப்பீட்டினை குறிப்பிட்ட காலத்திற்குள் கோர வேண்டும், இல்லையேல் இழப்பீடு கோரிக்கை ஏற்று கொள்ள பட மாட்டாது.

கடல் வழி போக்குவரத்து இழப்பு

 • அசல் விலைப்பட்டியல் மற்றும் பேக்கிங் பட்டியல் - விலைப்பட்டியலின் ஓர் அங்கமா இருந்தால்
 • சேதமானது போக்குவரத்தின் போது ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் எழும் பாதச்சத்தில் பொருட்களின் விநியோகமானது திறந்தவெளியில் நடத்தப்படவேண்டும் மேலும் அதற்கான சான்றிதழ் பெற படவேண்டும்
 • அசல் லாரி ரசீது (LR) / கப்பல் சரக்கு ரசீது (BL) - போக்குவரத்தில் சேதமடைந்த அல்லது இழந்த பொருட்களின் தரம் மற்றும் அளவை உறுதிசெய்ய தகுதிவாய்ந்தது.
 • பிரகடனக் காப்பீடை பொறுத்தவரையில் - அனுப்பப்படும் பொருள்கள் அறிவிக்கப்பட வேண்டும் மற்றும் எஞ்சியுள்ள காப்பீட்டு தொகை வரம்புக்குள் இருக்க வேண்டும்.
 • போக்குவரத்தின் போது இழப்பு / சேதம் ஏற்பட்டால், மீட்பு உரிமைகளை பாதுகாக்க,கால அளவிற்குள் ஒரு பணவியல் கோரிக்கையை ஊர்திகளிடம் பதிவு செய்யப்பட வேண்டும்.
 • ஊர்திகளிடமிருந்து சேதம் / இழப்பீடு சான்றிதழ் பெற வேண்டும்.
 • இழப்பு / சேதத்தின் இயல்பு, காரணம் மற்றும் அதன் அளவினை தீர்மானிக்க   (காப்பீடு நிறுவனத்தால் பரஸ்பர ஒப்புதல் பெற்ற) மதிப்பீட்டாளர் நியமிக்கப்பட வேண்டும்.

Download Motor Policy

Feedback