Claims

PrintPrintEmail this PageEmail this Page

நீங்கள் மருத்துவ காப்பீடு இழப்பீடு கோருவதற்கு 2 வழிகளில் விண்ணப்பிக்கலாம். உங்கள் இழப்பீடை பொறுத்தவரை நீங்கள் கட்டணமில்லா சேவைக்கு செல்லலாம் அல்லது மருத்துவமனை செலவை ஈடு செய்யும் சேவையை பெறலாம். பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

கட்டணமில்லா இழப்பீடு கோரும் வசதிக்கு நாங்கள் இணைந்துள்ள TPA-ன் மருத்துவமனைகள் நெட்வொர்க்கில் மட்டுமே கிடைக்கும். நீங்கள் மருத்துவமனையில் சேரும் முன் எங்கள் TPA மூலம் ஏதேனும் குறிப்பிட்ட மருத்துவமனையின் தற்போதைய நிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

இந்த வசதி கீழ் தேர்ந்தேடுத்த மருத்துவமனை, கட்டணமில்லா கோரிக்கை தொடர்பான நடைமுறையை முடிக்க, உங்களுக்கு உதவுவார்கள் . உங்கள் மருத்துவ அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் உறுப்பினர் எண்ணை மேற்கோள் காட்டி, நீங்கள் எங்களின் TPA நிர்வாகியை சேவை எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

கட்டணமில்லா இழப்பீடு கோருதல் இரண்டு வகைப்படும்:

  • அவசரகாலச் சேர்க்கைக்கான கட்டணமில்லா இழப்பீடு கோருதல் நடைமுறை
  • திட்டமிட்ட சேர்க்கைக்கான கட்டணமில்லா இழப்பீடு கோருதல் நடைமுறை

அவசரகாலச் சேர்க்கைக்கான கட்டணமில்லா இழப்பீடு கோருதல் நடைமுறை:

  • படி 1: இணைந்துள்ள மருத்துவமனை எனில், சேரும்போது, TPA அவர்களின் கட்டணமில்லா சேவை எண் மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். 
  • படி 2: மருத்துவமனை காப்பீட்டு உதவி மையத்தில் கிடைக்கும் கட்டணமில்லா கோரிக்கை படிவத்தை பூர்த்திசெய்து உங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரை அதற்கு சான்றளிக்கச் செய்யுங்கள்.
  • படி 3: TPA-க்கு கட்டணமில்லா கோரிக்கை படிவத்தை தக்க மருத்துவ ஆவணங்களுடன் தொலைநகல் (FAX) செய்யவும்
  • படி 4: TPA ஆனது ஆவணத்தை சரிபார்த்து மருத்துவமனைக்கு முடிவை தெரிவிக்கும். தேவைப்பட்டால், TPA கட்டணமில்லா கோரிக்கையை அனுமதிக்கலாம் அல்லது கூடுதல் ஆவணங்களை கேட்கலாம்.
  • படி 5: TPA-ஆல் கட்டணமில்லா பரிவர்த்தனை ஒப்புதல் கிடைத்தஉடன், மருத்துவமனை கட்டணங்கள் நேரடியாக (பாலிசி வரம்புகளுக்கு உட்பட்டு) தீர்க்கப்படும். தொலைபேசி கட்டணங்கள், உணவு, உதவியாளர் கட்டணங்கள் போன்ற அனுமதிக்கப்படாத தொகைகள் பாலிசிதாரர் ஏற்க வேண்டும். 
  • படி 6: கட்டணமில்லா இழப்பீடு கோரிக்கை TPA-ஆல் அங்கீகரிக்கப்படவில்லை என்றால், தயவுசெய்து அந்த இரசீதுக்கான (பில்) கட்டணத்தை மருத்துவமனையில் செலுத்துங்கள். மேலும் பணத்தைத் திரும்பப்பெற விண்ணப்பியுங்கள். பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி இழப்பீடு செயல்முறைப்படுத்தப்படும். 

எங்கள் TPA மூலம் பணமில்லா முடிவை அங்கீகரிப்பதற்கான கால அளவும் அனைத்து ஆவணங்களையும் பெற்ற பிறகு 24 மணி நேரம் ஆகும்.

திட்டமிட்ட சேர்க்கைக்கான கட்டணமில்லா இழப்பீடு கோருதல் நடைமுறை

  • படி 1: சிகிச்சைக்காக எங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகள் பட்டியலிலிருந்து ஒரு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்கவும் 
  • படி 2: சேருவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் உங்கள் மருத்துவ அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் உறுப்பினர் எண்ணை மேற்கோள் காட்டி, உங்களுக்கு உதவும். நீங்கள் எங்களின் TPA நிர்வாகியை அவர்களின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் 
  • படி 3: மருத்துவமனை காப்பீட்டு உதவி மையத்தில் கிடைக்கும் கட்டணமில்லா கோரிக்கை படிவத்தை பூர்த்திசெய்து உங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரை அதற்கு சான்றளிக்கச் செய்யவும். 
  • படி 4: TPA-க்கு கட்டணமில்லா கோரிக்கை படிவத்தை தக்க மருத்துவ ஆவணங்களுடன் தொலைநகல் (FAX) செய்யவும்
  • படி 5: TPA ஆனது ஆவணத்தை சரிபார்த்து மருத்துவமனைக்கு முடிவை தெரிவிக்கும். தேவைப்பட்டால், TPA கட்டணமில்லா கோரிக்கையை அனுமதிக்கலாம் அல்லது கூடுதல் ஆவணங்களை கேட்கலாம்.
  • படி 6: TPA-ஆல் கட்டணமில்லா ஈடுகோரலுக்கு ஒப்புதல் கிடைக்கும்போது, மருத்துவமனை கட்டணங்கள் நேரடியாக (பாலிசி வரம்புகளுக்கு உட்பட்டு) தீர்க்கப்படும். தொலைபேசி கட்டணங்கள், உணவு, உதவியாளர் கட்டணங்கள் போன்ற அனுமதிக்கப்படாத தொகைகள் பாலிசிதாரர் ஏற்க வேண்டும்.
  • படி 7: கட்டணமில்லா இழப்பீடு கோரல் TPA-ஆல் அங்கீகரிக்கப்படவில்லை என்றால், தயவுசெய்து அந்த இரசீதுக்கான (பில்) கட்டணத்தை மருத்துவமனையில் செலுத்துங்கள். மேலும் பணத்தைத் திரும்பப்பெற விண்ணப்பியுங்கள். பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி இழப்பீடுகள் செயல்முறைப்படுத்தப்படும்.

எங்கள் TPA மூலம் கட்டணமில்லா முடிவை அங்கீகரிப்பதற்கான கால அளவும் அனைத்து ஆவணங்களையும் பெற்ற பிறகு 24 மணி நேரம் ஆகும்.

இழப்பீடு தொகையை திரும்பப் பெறுவதற்கான நடைமுறை

நீங்கள் நெட்வொர்க் மருத்துவமனையில் இழப்பீடு பெறவில்லை அல்லது எங்கள் நெட்வொர்க்கில் இல்லாத ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறீர்கள் என்றால், பணம் திரும்பப் பெறுவதற்கான உங்கள் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.

  • மருத்துவமனையில் சேர்ந்த உடனேயே அல்லது மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய 7 நாட்களுக்குள் இப்கோ-டோக்கியோவின் கட்டணமில்லா சேவை எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். இழப்பீடு கோர தெரிவிக்கும்போது உங்கள் பாலிசி எண்ணைக் குறிப்பிடுங்கள்.
  • படி 2: மருத்துவமனையில் சிகிச்சையைப் முடித்து, அனைத்து கட்டணங்களையும் செலுத்தவும், பின்னர் பணத்தை திரும்பப் பெறுவதற்கான இழப்பீடு கோரிக்கை செய்யவும்.
  • படி 3: எங்கள் இணையத்தளத்தில் உள்ள தகுந்த இழப்பீடு படிவத்தை பதிவிறக்கவும் (அல்லது) இழப்பீடு மையம் மூலம் ஒரு கோரிக்கை செய்யவும்.

இழப்பீடு ஆவணங்கள் உள்ளூர் இஃகோ டோக்கியோ அலுவலக முகவரிக்கு சமர்ப்பிக்கப்படலாம், முகவரியை எங்கள் கட்டணமில்லா சேவை எண் 1800 543 5499-க்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்.

உங்களுக்கு இழப்பீடு செயல்முறை மீதான வழிகாட்டல் தேவைப்பட்டால், எங்கள் கட்டணமில்லா சேவை எண் - 1800 543 5499 - மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

ஆவண சரிபார்ப்பு பட்டியல்

பணம் திரும்பப்பெறும் இழப்பீட்டின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் – மருத்துவரின் சான்றிதழோடு சேர்த்து முறையாக பூர்த்தி செய்யப்பட்ட இழப்பீடு படிவம் 

  • வெளியேற்ற சுருக்கம்
  • இரசீதுகள்
  • மருந்து பரிந்துரைப்புகள்
  • முன்தொகை மற்றும் இறுதி ரசீதுகள்
  • நோய் கண்டறியும் பரிசோதனை அறிக்கைகள், எக்ஸ் ரே, ஸ்கேன் மற்றும் ஈசிஜி மற்றும் பிற படங்கள்

தேவைப்பட்டால், இழப்பீடு வழங்கும் குழு மேலே பட்டியலிடப்பட்டவற்றைக் காட்டிலும் கூடுதல் ஆவணங்களை கேட்கலாம்.

தயவு செய்து கவனிக்கவும்:

  • இழப்பீட்டுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்ற பிறகு பரிசீலிக்கப்படும் மேலும் ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு தேவைப்பட்டால் கூடுதல் ஆவணங்கள் / தகவல்கள் கேட்கப்படலாம்.
  • இழப்பீடு ஏற்கத்தக்கதாக இருக்கின்றதா என சரிபார்க்கப்பட்டு காசோலை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இல்லையெனில், ஒரு மறுப்பு கடிதம் உங்களுக்கு அனுப்பப்படும்.
  • இழப்பீடு கோருதலின் இழப்பீட்டினை செலுத்துவதற்கான கால அவகாசமானது அனைத்து ரசீதுகளும் பெற்ற பின் 20 நாட்கள் ஆகும்

இழப்பீடு தொகையை செலுத்துதல்

  • இந்த பாலிசியின் கீழ் அனைத்து இழப்பீடுகளும் இந்திய நாணயத்தில் அளிக்கப்படும். இந்த காப்பீட்டு கீழ் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் இந்தியாவில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.
  • IRDAI ஒழுங்குமுறைகளால் வரையறுக்கப்பட்டதை விட வேறு ஏதேனும் பாலிசியின் கீழ் செலுத்தப்பட்ட அல்லது செலுத்தத்தக்க தொகைகளுக்கான ஏதேனும் வட்டி / அபராதம் செலுத்த இப்கோ-டோக்கியோ பொறுப்பாகாது.
  • இழப்பீடு ஏற்கத்தக்கதாக இருந்தால், இழப்பீடு அளிக்கும் நேரத்தில் முன்மொழிந்தவர் உயிருடன் இல்லை எனில், முன்மொழிந்தவரின் சட்டபூர்வமான வாரிசுக்கு இழப்பீடு தொகை அளிக்கப்படும்.

Download Motor Policy

Feedback