நான் ஒரு பாலிசியை எப்படி வாங்கலாம்?

PrintPrintEmail this PageEmail this Page

காப்பீடு என்பது தேவைகளின் படி வாங்கவேண்டிய விஷயமாகும். IRDAI காப்பீடுகளை பின்வருவனவற்றில் மூலம் விற்க அனுமதிக்கிறது:

தளங்கள்

 • நிறுவனத்தின் வலைத்தளங்கள்
 • தொலைபேசியில் வாங்குதல். அது தனிப்பட்ட நிறுவனத்தை சார்ந்திருக்கிறது
 • காப்பீட்டு நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர்கள்
 • காப்பீட்டு தரகர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனம் தயாரிப்புகளை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர், வங்கிகள், சில்லறை வீடுகள் அல்லது மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் பங்குதாரராக இருக்கும் வணிக நிறுவனங்கள்.

செயல்முறை

 • மேலே கூறப்பட்ட சேனல்களின் வழியாக, முறையாக நிரப்பப்பட்ட முன்மொழிவு படிவத்துடன் காப்பீட்டு நிறுவனத்தை அணுகவும்
 • உங்கள் தேவையை ஏற்றுக்கொள்ளும் நோக்கத்தில் நிறுவனத்தின் அங்கீகாரத்தை கோருங்கள். (அதாவது உங்கள் ஆபத்து மற்றும் இடர்பாடுகளை மதிப்பீடு செய்தல். ஆபத்துகளை ஏற்றுக்கொள்வதா என்பதை முடிவு செய்யும் நிறுவனம் எவை என்பதன் அடிப்படையிலும், எந்த பிரீமியத்தின் விகிதத்தில் அவ்வாறான முடிவுகளை எடுப்பது என்றும் முடிவு செய்யும்).
 • பிரீமியம் மற்றும் அதன் தொடர்புடைய பிற விவரங்களை கோருங்கள்
 • பிரீமியம் செலுத்தி, பிரீமியம் ரசீது மற்றும் ஆதரசீட்டு/ இடர் குறிப்பு ஆகியவற்றை எடுத்துக் செல்லுங்கள்
 • ஆவணங்களுக்காக காத்திருக்கவும்
 • ரசீதில் சரியாக குறிப்பிட்டுள்ளதா என சரிபார்த்து, பாலிசி காலாவதியாகும் தேதி வரை கவனமாக சேமித்து வைக்கவும்
 • பாலிசி காலாவதிக்கு முன்னர், நீங்கள் சரியான நேரத்தில் பாலிசியை புதுப்பிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

Download Motor Policy

Feedback