எனது இழப்பீடு நிராகரிக்கப்படலாமா?

PrintPrintEmail this PageEmail this Page

சில சமயங்களில் காப்பீட்டு நிறுவனத்தால் எந்த ஒரு இழப்பீடும் நிராகரிக்கப்படலாம். இழப்பீடு நிராகரிக்கப்படுவதற்கான சில பொதுவான காரணங்கள்:

  • பாலிசி காலாவதியாகியுள்ளது, அல்லது பாலிசி இரத்து செய்யப்பட்ட்டுள்ளது அல்லது பிரீமியம் காசோலைக்கு பணம் மறுக்கப்பட்டுள்ளது ஆகியவை பாலிசியை செல்லாததாக்கும்.
  • விபத்து அல்லது இழப்பு தேதி பாலிசி காலகட்டத்திற்கு வெளியே இருக்கலாம் அல்லது
  • விபத்து நேரத்தில் வாகனம் ஓட்டும் நபர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்கவில்லை அல்லது அவர் போதை மருந்துகள் அல்லது மது ஆதிக்கத்தில் இருந்திருந்தார்.
  • வாகனத்தின் உரிமையாளர் மாறியுள்ளார் ஆனால் காப்பீட்டு நிறுவனத்திற்கு அத்தகைய மாற்றம் 14 நாட்களுக்குள் தெரிவிக்கப்படவில்லை அல்லது சேதாரங்கள் பாலிசி தொடங்குவதற்கு முன்னரே இருந்துள்ளது.
  • விபத்துக்களின் தன்மை விபத்துக்கான காரணத்துடன் பொருந்தவில்லை அல்லது வாகனம் தனிப்பட்ட அல்லது சமூக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை போன்ற வேறு சில காரணங்கள் இருக்கலாம்.

Download Motor Policy

Feedback