ஆமாம். உங்களுக்கு காப்பீடு தேவைப்படும். நீங்கள் ஆரோக்கியமாகவும் இளம் வயதினராக இருந்தாலும், மருத்துவரை பல வருடங்களாக பார்க்க வேண்டிய அவசியமில்லாமல் இருந்தாலும் கூட, விபத்துக்கள் அல்லது அவசரநிலை போன்ற எதிர்பாராத சம்பவங்களை எதிர்கொள்ள உங்களுக்கு காப்பீடு தேவை. மருத்துவ காப்பீட்டுக் உங்கள் வழக்கமான மருத்துவரின் பரிசோதனை போன்ற மிகவும் விலையுயர்வற்ற விஷயங்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படாமல் இருக்கலாம் (எடுத்துக் கொள்ளப்பட்ட பாலிசியை பொறுத்து), கடுமையான நோய் அல்லது காயங்கள் போன்ற பெரிய சிகிச்சையின் செலவினங்களுக்கு எதிராக பாதுகாப்பைக் கொண்டிருப்பதுதான் காப்பீடு எடுத்துக்கொள்வதற்கான முக்கிய காரணம். எப்போது அவசரகால மருத்துவ உதவி தேவைப்படும் என்று எவருக்கும் தெரியாது. அவசர நிலை ஏற்படும்போது உங்கள் பணத்தை சேமிக்க, மருத்துவ காப்பீட்டை பெற்றிருப்பது சிறந்தது.

இல்லை. உங்களுக்கு அகல மரணம் அல்லது வேறேதேனும் நேர்ந்தால், உங்கள் குடும்பம் (அல்லது உங்களை சார்ந்திருப்பவர்களை) நிதி இழப்பிலிருந்து ஆயுள் காப்பீடு பாதுகாக்கிறது. பாலிசிதாரரின் இறப்புக்கு பின் அல்லது காப்பீடு முதிர்ச்சி பெற்ற பின்னரே காப்பீட்டு தொகை வழங்கப்படும். மருத்துவ காப்பீட்டானது, நீங்கள் நோய் அல்லது காயத்தால் பாதிக்கப்பட்டால், உடல்நலக்குறைவு / நோய்களுக்கு நீங்கள் மேற்கொள்ளும் செலவுகளுக்கு (சிகிச்சை, நோயறிதல் போன்றவை) இழப்பீடு வழங்குகிறது. காப்பீடு முதிர்ச்சிபெறும் போது காப்பீட்டு தொகை வழங்கப்பட மாட்டாது. மருத்துவ காப்பீடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

தொடர் பாலிசி புதுப்பிப்பு பலன்கள் காரணத்திற்காக நீங்கள் சொந்தமாக மருத்துவ காப்பீட்டு வைத்துக்கொள்ளும்படி வலுவாக அறிவுறுத்தப்படுகிறது. முதலாவதாக, நீங்கள் உங்கள் வேலையை மாற்றினால், உங்கள் புதிய நிறுவனத்திடமிருந்து மருத்துவ காப்பீட்டை பெறுவீர்கள் என்ற அவசியமில்லை. எனினும் உங்கள் வேலை மாற்றத்திற்கு இடையேயான காலங்களில் நீங்கள் மருத்துவ செலவுகளை ஏற்க நேரிடும். இரண்டாவதாக, உங்கள் பழைய நிறுவனத்தில் நீங்கள் மருத்துவ காப்பீட்டில் கட்டியுள்ள பதிவுப் பட்டியல் புதிய நிறுவனத்தின் காப்பீட்டிற்கு மாற்றப்படாது. ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு புதிய காப்பீடு இழப்பீடு வழங்குவதில் பிரச்சினை ஏற்படலாம். பெரும்பாலான காப்பீடு ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு 5 ஆம் ஆண்டு முதல் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். எனவே, மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு, உங்கள் நிறுவனம் வழங்கிய குழு மருத்துவ காப்பீட்டு பாலிசியோடு, தனியாக காப்பீட்டு பாலிசி கூடுதலாக எடுத்துக்கொள்வது நல்லது.

இல்லை. மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் மகப்பேறு / கர்ப்பம் தொடர்பான செலவுகளுக்கு இழப்பீடு இல்லை. இருப்பினும், நிறுவனங்கள் வழங்கும் குழு காப்பீட்டுத் திட்டங்கள் பெரும்பாலும் மகப்பேறு தொடர்பான செலவுகளுக்கு காப்பீடு வழங்கும்.

ஆமாம், வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80 டி இன் கீழ் வரி சலுகைகள் உள்ளன. ஒவ்வொரு வரி செலுத்துபவரும், தான் மற்றும் தன்னை சார்ந்தவர்களுக்கு செலுத்தும் மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தில் 15000 ரூபாய் ஆண்டுதோறும் வரி விலக்கு பெற முடியும். மூத்த குடிமக்களுக்கு இந்த தள்ளுபடி 20000 ருபாய் ஆகும். கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை நீங்கள் காண்பிக்க வேண்டும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. (80 டி பிரிவின் சலுகைகள், 80 சி பிரிவின் கீழ் வழங்கப்படும் ரூ, 1,00, 000 விதிவிலக்குகளிலிருந்து வேறுபட்டது).

45 வயதிற்கு மேலான வாடிக்கையாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு பாலிசிக்கு மருத்துவ பரிசோதனை தேவை. பொதுவாக பாலிசியை புதுப்பிப்பதற்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை.

மருத்துவ காப்பீடு என்பது பொது காப்பீடு பாலிசிகள் போன்றதாகும் வழக்கமாக ஒரு ஆண்டு காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இருப்பினும், சில நிறுவனங்கள் இரண்டு வருட காப்பீடு திட்டங்களை வழங்குகின்றன. உங்கள் காப்பீடு முடிவடையும் தருணத்தில் நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.

காப்பீட்டுத் தொகை என்பது உரிமைக்கோரலின் போது செலுத்த வேண்டிய அதிகபட்ச இழப்பீடு தொகை ஆகும். இது "காப்பீட்டு செய்யப்பட்ட தொகை' மற்றும் "உறுதியளிக்கப்பட்ட தொகை" எனவும் அறியப்படுகிறது. காப்பீட்டு கட்டணம் (பிரீமியம்) நீங்கள் தேர்வு செய்யும் காப்பீட்டு தொகையை பொறுத்து அமையும்.

ஆம். உங்கள் அனைத்து குடும்ப நபர்களையும் ஒரு காப்பீடு திட்டத்தின் கீழ் சேர்க்க முடியும். உங்கள் மருத்துவ காப்பீடு பாலிசி இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் வசிக்கும் இடத்திற்கு அருகே காப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏதேனும் மருத்துவமனைகள் உள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். உங்களுடைய காப்பீட்டு நிறுவனத்தின் பிணைய மருத்துவமனைகள் நீங்கள் வசிக்கும் அல்லது உங்களுடைய ஏனைய குடும்பத்தார் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பிணைய மருத்துவமனைகள் மருத்துவ செலவுகளுக்கு பணமில்லாமல் தீர்வு காண்பதற்காக TPA(மூன்றாம் தரப்பு நிர்வாகி) உடன் இணைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைகள் ஆகும்.

உங்களுடைய வசிப்பிடத்தின் அருகில் பிணைய மருத்துவமனை இல்லையெனில், நீங்கள் செலவு செய்த மருத்துவ செலவுகளை பாலிசிதாரருக்கு நேரடியாக வழங்கப்படும்.

அடிப்படை மருத்துவ காப்பீட்டின் கீழ், இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சிகிச்சைக்கு காப்பீடு இல்லை. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ இல்லங்களில் அலோபதி சிகிச்சைகளுக்கு மட்டுமே காப்பீடு உண்டு.

நோயாளிகள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்காவது மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அதன் தொடர்பான நோய்கண்டறியும் சோதனைகளான எக்ஸ்ரே, MRI, இரத்த பரிசோதனைகள் போன்ற அனைத்து செலவினங்களுக்கும் மருத்துவ காப்பீடு இழப்பீடு வழங்கும். வெளிநோயளிகள் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு நோயறிதலுக்கான பரிசோதனைகளுக்கும் பொதுவாக இழப்பீடு வழங்கப்படாது.

மூன்றாம் தரப்பு நிர்வாகி (பொதுவாக TPA என குறிப்பிடப்படுகிறது), IRDAI (காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இந்தியா) அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு மருத்துவ சேவை வழங்குபவராவர். TPA, மருத்துவமனைகளுடன் பிணைப்பு, செலவில்லா மருத்துவமனை சேவைகளுக்கு ஏற்பாடு செய்தல், இழப்பீடு செயலாக்கம் மற்றும் சரியான நேரத்தில் தீர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகளை காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்குகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, நோயாளி அல்லது அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு பணம் செலுத்த வேண்டும். கட்டணமில்லா மருத்துவமனை சேர்க்கையில், மருத்துவமனையிலிருந்து வெளியேறும் போது, நோயாளி மருத்துவமனை செலவினங்களை செலுத்த தேவையில்லை. காப்பீட்டு நிறுவனம் சார்பாக மூன்றாம் தரப்பு நிர்வாகியினால்(TPA) நேரடியாக தொகை செலுத்தப்படுகிறது. இது உங்கள் வசதிக்காக மட்டுமே.

இருப்பினும், நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக மூன்றாம் தரப்பு நிர்வாகியின்(டிபிஏ) முன் ஒப்புதல் தேவைப்படுகிறது. அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, சேர்க்கைக்குப்பிறகு ஒப்புதல் பெறலாம். இந்த வசதி டிபிஏவின் பிணைய மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஆம், நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவ காப்பீட்டு பாலிசியை பெறலாம். கோரிக்கைகளின்போது, ஒவ்வொரு நிறுவனமும் காப்பீடு தொகை விகிதாசாரப்படி இழப்பீடு வழங்கும். உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் A காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ. 1 லட்சம் காப்பீடு தொகையும் மற்றும் B காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ. 1 லட்சம் காப்பீடு தொகையும் பெற்றிருக்கிறார். ரூ. 1.5 லட்சத்திற்கான இழப்பீட்டின் போது, ஒவ்வொரு பாலிசியும் 50:50 என்ற விகிதத்தில் காப்பீடு செய்யப்பட்ட தொகைவரை பணம் செலுத்தும்.

நீங்கள் புதிய மருத்துவ காப்பீட்டை வாங்கும் போது, பாலிசி தொடக்கத் தேதியில் இருந்து 30 நாட்கள் வரை காத்திருக்கும் காலம், இந்த காலக்கட்டத்தில் எந்தவொரு மருத்துவமனை செலவுகளும் செலுத்தப்பட மாட்டாது. எனினும், இது விபத்து காரணமாக ஏற்படும் அவசர மருத்துவமனை சிகிச்சைக்கு பொருந்தாது. பாலிசி புதுப்பிக்கப்படும் போது இந்த 30 நாள் காத்திருப்பு காலம் பொருந்தாது.

கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இழப்பீடு செலுத்தப்பட்ட பிறகு, செலுத்தப்படும் தொகைக்கு ஈடாக காப்பீடு தொகை குறைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக: ஜனவரி மாதத்தில் நீங்கள் ரூ 5 லட்சம் ரூபாய் காப்பீடு தொகையை கொண்ட ஒரு பாலிசியை தொடங்குகிறீர்கள். ஏப்ரல் மாதத்தில் நீங்கள் ரூ.2 லட்சம் ரூபாய் இழப்பீடு கோருகிறீர்கள். மே மாதம் முதல் டிசம்பர் மாதம் உங்களுக்கு கிடைக்கும் காப்பீடு தொகை மீதமுள்ள ரூ.3 லட்சம் ரூபாய் மட்டுமே ஆகும்.

பாலிசி காலத்தில் எத்தனை இழப்பீடுகள் வேண்டுமானாலும் அனுமதிக்கப்படும். இருப்பினும்,பாலிசியின் கீழ் காப்பீடு தொகையே அதிகபட்ச வரம்பாகும்.

மருத்துவ காப்பீட்டை வாங்குவதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை. காப்பீட்டு நிறுவனம் மற்றும் TPA வின் விதிமுறைகளைப் பொறுத்து தற்போது, பான் அட்டை அல்லது ID ஆதாரம் கூட தேவையில்லை. இழப்பீடை சமர்ப்பிக்கும் நேரத்தில் அடையாள சான்றிதழ் போன்ற ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

 

ஆமாம், நீங்கள் இந்தியாவில் படிக்கும் ஒரு மாணவர் அல்லது செல்லுபடியாகும் வேலை விசாவுடன் பணி புரிகிறீர்கள் என்றால்.

ஆனால் நீங்கள் மூன்று வாரங்களுக்கு இந்தியாவிற்கு வந்திருக்கும் சுற்றுலா பயணிகளாக இருந்தால், முப்பது நாட்கள் காத்திருக்கும் காலம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யாது, இதை பெறுவது பயனற்றது.

இந்தியாவில் வழங்கப்படும் பாலிசியில் மருத்துவ சுற்றுலா இழப்பீட்டிற்கு காப்பீடு இல்லை.

 

வயது மற்றும் காப்பீட்டு தொகை ஆகியவை மருத்துவ காப்பீட்டின் கீழ் பிரீமியத்தைத் தீர்மானிக்கும் காரணிகள் ஆகும். பொதுவாக இளைஞர்கள் ஆரோக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள், இதனால் அவர்களிடமிருந்து குறைந்த வருடாந்திர பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. முதியவர்களுக்கு உடல்நல பிரச்சினைகள் அல்லது உடல்நலக்குறைவு அதிகமாக ஏற்படும் என்பதால், அதிக மருத்துவ காப்பீட்டு பிரீமியம் செலுத்துகின்றனர்.

கட்டணமில்லா இழப்பீடு தீர்வில், இது நேரடியாக பிணைய மருத்துவமனைக்கு செலுத்தப்படும். கட்டணமில்லா தீர்வு இல்லாத சமயங்களில்,இழப்பீடு தொகை பாலிசிதாரரின் நியமானதாரருக்கு வழங்கப்படும்.

பாலிசியின் கீழ் காப்பீட்டு தாரர் யாரையும் நியமானதாரரை நியமிக்கவில்லை என்றால், பின்னர் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு தொகையை வழங்குவதற்காக சட்ட நீதிமன்றத்தில் இருந்து வாரிசுசான்றிதழை பெறும்படி வலியுறுத்தும். மாற்றாக காப்பீட்டு நிறுவனம், இறந்தவரின் சட்ட வாரிசுகளுக்கு பணம் செலுத்துவதற்காக இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தலாம்.

ஆமாம், இரண்டும் ஒன்று தான்.

மருத்துவச் செலவினங்களுக்கான இழப்பீடு வழங்குவது மருத்துவ காப்பீடு.

கொடிய நோய் காப்பீடு என்பது ஒரு ஈட்டுறுதி பாலிசியாகும். ஈட்டுறுதி பாலிசியின் கீழ் எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படும் போது, காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டுதாரருக்கு ஒரு மொத்த தொகையை செலுத்துகிறது. கொடிய நோய்க்கான காப்பீட்டில், பாலிசிதாரர் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் முக்கிய நோயுடன் கண்டறியப்பட்டால்.

காப்பீடு நிறுவனம் பாலிசிதாரருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை செலுத்தும். மருத்துவ சிகிச்சைக்காக பாலிசிதாரர் பெற்ற தொகையை செலவழிப்பதும் அல்லது செலவழிக்காமல் இருப்பதும், பாலிசிதாரரின் சொந்த விருப்பத்தை பொறுத்தது.

காப்பீட்டை பெறுவதற்காக முன்மொழிவு படிவத்தை பூர்த்தி செய்யும் போது, உங்கள் வாழ்நாளில் நீங்கள் பாதிக்கப்பட்ட நோய்களின் விவரங்களை வழங்க வேண்டும். காப்பீடு வாங்கும்போது, உங்களுக்கு ஏதேனும் நோய் இருக்கிறதா, நீங்கள் ஏதேனும் நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறீர்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் நோய் மற்றும் புதிதாக கண்டறியப்பட்ட நோய் பற்றிய உடல்நல பிரச்சினைகளை வேறுபடுத்தி தங்கள் மருத்துவ குழுவிற்கு குறிப்பிடுவர்.

குறிப்பு : மருத்துவ காப்பீட்டுக் பாலிசியை வாங்குவதற்கு முன் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் ஏதேனும் நோய் பற்றிய தகவல்களை குறிப்பிடுவது முக்கியம். காப்பீடு என்பது நல்ல நம்பிக்கை அடிப்படையிலான ஒரு ஒப்பந்தமாகும், மேலும் எந்த உண்மைத்தன்மையுமின்றி வெளிப்படுத்தும் தகவல் எதிர்காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

நீங்கள் பாலிசியை ரத்து செய்தால், பாலிசி ரத்து செய்யப்படும் நாளிலிருந்து உங்களுக்கு பலன்கள் வழங்கப்பட மாட்டாது. கூடுதலாக,குறுகிய காலத்தில் ரத்துசெய்த விகிதங்களின் படி பிரீமிய தொகை உங்களுக்கு திருப்பி அளிக்கப்பட வேண்டும். பாலிசி ஆவணத்தில் உள்ள ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் நீங்கள் இதனை காணலாம்.

இந்தியாவின் பயண காப்பீட்டு திட்டம் சர்வதேச மருத்துவ செலவுகள் மற்றும் பயணம் தொடர்பான காப்பீட்டு தேவைகள் ஆகியவற்றை வழங்குகிறது. பயண தாமதங்கள், பயண குறுக்கீடுகள், பயணம் ரத்து மற்றும் பயண தொடர்புடைய சிக்கல்களுக்கு காப்பீடு வழங்குவது மட்டுமல்லாமல், இது உங்கள் பயணத்தின் போது ஏற்படும் மருத்துவ மற்றும் பயண தொடர்பான அவசர கால மருத்துவ செலவுகளுக்கு காப்பீடு வழங்குகிறது. சில திட்டங்கள் உங்கள் பயணத்தின் தொடர்பான ஆலோசனை, மருத்துவ அவசர காலத்தின் போது உங்கள் வீடு அல்லது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுதல், பணம், விலையுயர்ந்த பொருட்கள் அல்லது பயண ஆவணங்கள் இழப்பு அல்லது திருட்டில் போகும் போது, அவசர பணஉதவி அல்லது உதவி முதலிய சேவைகளை வழங்குகின்றன.

நீங்கள் பாலிசியை இணையத்தில் அல்லது எங்களுடைய கிளையில் வாங்கலாம்.

பயண காப்பீட்டை இணையத்தில் வாங்குவது மிக எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், எங்கள் வலைத்தளத்தில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி, உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு, உங்கள் கடன் / பற்று அட்டை பயன்படுத்தி வாங்கலாம். பரிமாற்றம் பாதுகாப்பான வலைப்பக்கத்தில் செய்யப்படுவதால், உங்கள் கடன் அட்டை பற்றிய தகவல் பாதுகாக்கப்படும்.

பயணி இந்தியாவில் இருக்கும் வரை, உலகில் எங்கிருந்தும் காப்பீட்டை வாங்கலாம். அமெரிக்காவில் அல்லது ஐக்கிய ராஜ்யத்தில் இருக்கும் மகன் அல்லது மகள் இந்தியாவிலிருந்து பயணிக்கும் தனது பெற்றோருக்கு காப்பீடு வாங்க முடியுமா.

இந்தக் பாலிசியை பற்றிய அனைத்து விவரங்களும் வலைத்தளத்தில் உள்ளன, எனவே திட்டத்தை வாங்கும் போது உங்களுக்கு தோன்றும் முடிவை எடுங்கள், உங்கள் பயண முகவர் அல்லது காப்பீட்டு முகவரின் முடிவை சார்ந்து இருக்க வேண்டாம்.

இணையத்தில் பயண காப்பீட்டை வாங்குவது வசதியாக இருப்பதினால், நேரம் சேமிக்கப்பட்டு, எந்தவொரு ஆவணமும் இல்லாமல் நிமிடங்களில் பணி முடிக்கப்படுகிறது. எந்தவொரு ஆவணமும் இல்லாமல் இருப்பதினால், இணையத்தில் வாங்குவது சுற்றுசூழலுக்கு ஏற்றது.

இல்லை, நீங்கள் கூடுதலாக எதையும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் காப்பீட்டு பிரிமீயத்திற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும். எங்கள் இணையதள வசதி சிறந்த விலைகளை வழங்குகிறது; இது போன்ற குறைந்த விலை பாலிசி வேறு எங்கும் கிடைக்காது.

எங்கள் 5 வேறுபட்ட திட்டங்களிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுப்பதன் மூலம் எப்போதும் பணத்தை சேமிக்க முடியும். உங்கள் செலவுத்திட்டம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பாலிசிகளை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டியிருந்தால், வருடாந்திர பல-பயண காப்பீடு திட்டம் சிறந்தது.

இல்லை, பயண காப்பீடு பெறுவதற்கு எந்த மருத்துவ சோதனையும் தேவை இல்லை. ஆயினும், 70 வயதை நிறைவு செய்த முன்மொழிவுதாரர் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். 60 முதல் 69 வயதை அடைந்த முன்மொழிவுதாரர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை சமர்பிக்கவேண்டிய கட்டாயம் இல்லை.

நீங்கள் பாலிசி ஆவணத்தை மின்னஞ்சல் மூலம் பெறுவீர்கள், அதே ஆவணத்தின் அசல் நகலை உங்கள் இந்திய முகவரிக்கு கூரியர் மூலம் அனுப்பப்படும். இணைய வழி பாலிசியை பொறுத்தவரை, காப்பீட்டின் மின் பிரதிகள், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

ஆமாம், அதிகபட்சம் $ 250.00 வரை

இறந்த உடலை காப்பீட்டு தரரின் குடும்பத்தினரிடம் இந்தியாவிற்கு கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து செலவிற்காக $ 7000.00 வரை காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.

துணி வாங்குதல் அவசரமாக தேவைப்படும் ஏதேனும் பொருள்களை வாங்குவது போன்ற அவசர தேவைகளை பூர்த்தி செய்ய தங்கள் சொந்த இடத்திற்கு சென்ற பிறகு அதிகபட்சமாக $ 1000.00 வரை காப்பீட்டு நிறுவனம் வழங்குகிறது.

தனியார் கார் சமூக, உள்நாட்டு மற்றும் இன்பம் நோக்கங்களுக்காகவும் மற்றும் பாலிசிதாரர் மற்றும் அவரது பணியாளர்கள் மாதிரி பொருள்களை சுமந்து செல்லுதல் போக வணிக நோக்கங்கள தவிர்த்து பயன்படுத்தப்படலாம்.

பின்வரும் நிகழ்வுகளில், காப்பீட்டாளர் வாடிக்கையாளரின் தனிப்பட்ட கார் மற்றும் அதன் பாகங்கள் மீதான ஏதேனும் இழப்பு அல்லது சேதத்திற்கு எதிராக இழப்பீடு வழங்கும்:

 • தீ விபத்து, வெடிப்பு, சுய பற்றவைப்பு அல்லது மின்னல்
 • கொள்ளை, வீட்டை உடைத்தல் அல்லது திருட்டு
 • கலவரம் அல்லது மறியல்
 • பூகம்பம் (தீ விபத்து மற்றும் அதிர்ச்சி சேதம்)
 • சூறாவளி, புயல், அதிக தட்பவெட்பம், வெள்ளப்பெருக்கு, பனிமழை, உறைபனி,
 • வெளிப்புற ஆபத்துகள்
 • தீங்கிழைக்கும் செயல்
 • பயங்கரவாத நடவடிக்கை
 • சாலை, இரயில், உள்நாட்டு - கடல்வழி, லிப்ட், மின் தூக்கி அல்லது விமானத்தில் செல்லும்போது
 • நில சரிவு அல்லது பாறை சரிவு

அனைத்து மோட்டார் காப்பீடுகளும் பன்னிரண்டு மாத காலத்திற்கு வழங்கப்படும் வருடாந்திர பாலிசியாகும். ஒரே தேதியின் கீழ் அனைத்து புதுப்பித்தல்களும் கொண்டு வரவோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு வசதியாக வேறு எந்த காரணத்திற்காகவும்,தகுந்த அதிகாரியின் ஒப்புதலுடன் 12 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு நீட்டிப்பு அனுமதிக்கப்படலாம். அத்தகைய நீட்டிப்புகளுக்கு கூடுதல் பிரீமியம் கட்ட வேண்டும். 12 மாதங்களுக்கும் குறைவான பாலிசி, குறுகிய கால அடிப்படையில் கணக்கிட்டு தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் வழங்கப்படும்.

பின்வரும் அனைத்து சூழ்நிலைகளிலும் முன்மொழிவு படிவம் தேவை

 • புதிய பாலிசி
 • மற்ற நிறுவன புதுப்பித்தல்
 • வாகன பெயர் மாற்றம்
 • பொறுப்பு மட்டுமான பாலிசியை தொகுப்பு பாலிசியாக மாற்றும் போது
 • வாகனம் மாற்றுதல்/பதிலீட்டுதல்
 • பாலிசி நடைமுறையில் இருக்கும் போது மற்றும் புதுப்பித்தலின் போது வாகனத்தை மாற்றுதல் / மேம்படுத்துதல்

பின்வரும் சூழ்நிலைகளின் கீழ் வாடிக்கையாளர் வாகனத்தை பரிசோதனைக்கு சமர்ப்பிக்க வேண்டும்:

 • காப்பீட்டில் இடைவெளி ஏற்பட்டால்
 • TP பாலிசியை OD பாலிசியை மாற்றும் போது
 • இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு காப்பீடு வழங்குவதற்கு
 • காசோலை பவுன்ஸ் ஆன பிறகு புதிய கட்டணம் பெறும் பொழுது
 • எழுத்துறுதி வழங்கும் துறையிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட நபர் வாகனத்தை பரிசோதிப்பார்

தனியார் கார்களின் பிரீமியம் மதிப்பீடு பின்வரும் காரணிகளை அடிப்படையாக கொண்டது:

 • பாலிசிதாரர் நிர்ணயிக்கும் மதிப்பு(IDV)
 • வாகனத்தின் கன திறன்(cc)
 • புவியியல் மண்டலங்கள்
 • வாகனத்தின் வயது

விலக்குகள்:

 • தொடர் விளைவாக ஏற்படும் இழப்பு,அன்றாட சேதம் மற்றும் தேய்மானம், இயந்திர அல்லது மின் பழுது, செயலிழப்பு அல்லது உடைதல்
 • வாகனம் சேதம் அடைந்திருக்கும் அதே நேரத்தில், டயர்கள் மற்றும் குழாய்களில் சேதம் ஏற்படும் போது,காப்பீட்டு நிறுவனம் அதை மாற்றுவதற்கான செலவுகளை 50% வரை மட்டுமே ஏற்கும்
 • இழப்பின் போது, தனியார் கார் ஒட்டிய நபர் குடி அல்லது போதை பொருள்களின் ஆதிக்கத்தில் இருந்தால்
 • செல்லுபடியாகும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டினால்
 • வாடகை அல்லது பரிசிற்காக வாகனத்தை பயன்படுத்துதல், மாதிரிகளை தவிர பிற பொருள்களை ஏற்றி செல்லுதல், பந்தய மற்றும் பிற பந்தய தொடர்பான நோக்கங்கள் மற்றும் மோட்டார் வர்த்தக நோக்கங்களுக்காக ஓட்டுதல்

உங்கள் வாகனத்தின் சேதம் - பாலிசியில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு, இயற்கை சீற்றம் மற்றும் மனிதன் ஏற்படுத்தும் பேரழிவுகள் காரணமாக உங்கள் கார் அல்லது அதன் பாகங்களுக்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்புக்கு காப்பீடு வழங்குகிறது.

(I)தனிநபர் விபத்து -மோட்டார் காப்பீடு, வாகனத்தின் உரிமையாளர்களுக்கான கட்டாய தனிநபர் விபத்து காப்பீடு வழங்குகிறது, தனிநபர் விபத்து காப்பீடு தொகை ரூ. 2 லட்சம் வரை ஆகும்.

நீங்கள் பயணிகழுக்கான தனிநபர் விபத்து காப்பீடை தேர்வு செய்யலாம். அதிகபட்ச காப்பீடு தொகை ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும் .

மூன்றாம் தரப்பு சட்டபூர்வ பொறுப்பு - வாகன உரிமையாளரின் சட்டபூர்வ பொறுப்புகளுக்கு பின்வரும் இழப்பீடுகளை இந்த காப்பீடு வழங்குகிறது:

 • மூன்றாம் நபருக்கு மரணம் அல்லது உடல் காயம்.
 • மூன்றாம் நபரின் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம்.

இந்த கொடுக்கல் பொறுப்பு, இறப்பு அல்லது காயம் ஆகிவற்றுக்காக வரம்பற்ற இழப்பீடு தொகை வழங்குகிறது மற்றும் மூன்றாம் தரப்பிற்கு ஏற்படும் பொருள் சேதத்திற்கு இழப்பீடு தொகை வர்த்தக மற்றும் தனியார் வாகனங்களுக்கு ரூ .7.5 லட்சம் மற்றும் ஸ்கூட்டர்கள் / மோட்டார் சைக்கிள்களுக்கு 1 லட்சம் ரூபாய் ஆகும்.

ஆதாரச்சீட்டு என்பது, காப்பீடு நிறுவனம் பாலிசி வழங்குவதற்கு முன்னர் வழங்கும் தற்காலிக சான்றிதழ் ஆகும்,இதற்கு பின்னர் காப்பீட்டு முன்மொழிவு படிவம் பூர்த்தி செய்யப்பட்டு பிரீமியம் செலுத்தப்படும்.

ஆதாரச்சீட்டு வழங்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்கு வரை செல்லுபடியாகும் மற்றும் ஆதாரச்சீட்டு காலாவதியாவதற்கு முன்னர் காப்பீட்டு சான்றிதழை காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.

IDV என்பது பாலிசிதாரர் நிர்ணயிக்கும் மதிப்பு. இது வாகனத்தின் மதிப்பாகும், வாகனத்தின் தற்போதைய உற்பத்தியாளர்களின் பட்டியலிடப்பட்ட விற்பனை விலையை கணக்கில் கொண்டு அட்டவணையில் பரிந்துரைக்கப்படும் அளவு தேய்மான சதவிகிதம் கழிப்பதன் மூலம் பெறப்பட்ட மதிப்பாகும். 5 ஆண்டுகளுக்கும் மேலான மற்றும் பயனற்றிருக்கும் வாகனங்களின் IDV என்பது காப்பீட்டு நிறுவனம் மற்றும் பாலிசிதாரர் இடையே தீர்மானிக்கப்படும் மதிப்பாகும்.

உற்பத்தியாளர் பட்டியலிடப்பட்ட விற்பனை விலை = செலவு விலை + உள்ளூர் வரி, பதிவு மற்றும் காப்பீடு செலவுகளை தவிர்த்து.

முடக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு மேலாக பயனற்றிருக்கும் வாகனத்தின் மதிப்பானது எங்கள் பல்வேறு மதிப்பீட்டுக் குழுவினர்களான IMAs, சர்வேயர்கள் குழு, கார் விநியோகஸ்தர், உபயோகப்படுத்திய கார்களின் விநியோகஸ்தர் போன்றவரைகளின் உதிவியுடன் கணிக்கப்படுகிறது.

வாகனத்துடன் வாகன உற்பத்தியாளர்களால் வழங்கப்படாத பொருட்கள் மின் / மின்னணு பாகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

எ.கா., வாகனத்துடன் வழங்கப்படாத இசை கருவிகள், LCD அல்லது ஒலிபெருக்கிகள் போன்றவை.

தனியார் கார் காப்பீட்டின் கீழ் அனுமதிக்கப்படும் தள்ளுபடிகள்:

 • விருப்பத்தின் பேரில் பாலிசி பிடித்தம் தள்ளுபடி
 • இழப்பீடு இல்லா வருடத்திற்கான போனஸ்(NCB)
 • ஆட்டோமொபைல் சங்க தள்ளுபடி
 • பழைய காலத்து கார் மீதான தள்ளுபடி
 • வேறு எந்த தள்ளுபடிகளும் அனுமதிக்கப்படவில்லை
 • முந்தைய ஆண்டில் எந்தவொரு இழப்பீடும் சமர்பிக்காததற்காக வழங்கப்படும் வெகுமதி. ஒவ்வொரு வருடமும் சேர்த்து கொண்டே போகலாம்
 • 20% தொடங்கி 50% வரை செல்லும்
 • இழப்பீடு சமர்ப்பிக்கும் போது NCB இல்லாமல் போகும்.
 • NCB வாடிக்கையாளரின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது வாகனத்தை அல்ல.
 • செல்லுபடியாகும் காலம் - பாலிசி காலாவதியான தேதி முதல் 90 நாட்கள் வரை
 • NCB 3 ஆண்டுகளுக்குள் பயன்படுத்திக்கொள்ளலாம்(தற்போது இருக்கும் வாகனம் விற்பனை செய்யப்பட்டு புதிய கார் வாங்குகிறபோது)
 • பெயர் மாற்றம் செய்யும் போது NCB மீட்பு செய்யப்பட வேண்டும்
 • பாலிசிதாரர் இறப்பு பட்சத்தில் NCB சட்டபூர்வமான வாரிசுக்கு மாற்றப்படும்
 • அதே ரக வாகனம் மாற்றியமைக்கும் போது புதிய வாகனத்திற்கு NCB மாற்றம் செய்யப்படும்
 • வெளிநாட்டில் சம்பாதித்த NCB இந்தியாவில் வழங்கப்படலாம்

தனியார் கார் காப்பீட்டின் கீழ் பெறும் பல்வேறு PA(தனிநபர் விபத்து) காப்பீடுகள்:

 • உரிமையாளர்/ஓட்டுனருக்கு PA
 • பணம் செலுத்திய ஓட்டுனருக்கு PA
 • பெயரிடப்படாத பயணிகளுக்கு PA
 • பெயரிடப்பட்ட பயணிகளுக்கு PA

வாடிக்கையாளர் வாகனத்தை வேறொரு நபரிடம் விற்றுவிட்டால், வாங்குபவரின் பெயரில் காப்பீடு மாற்றப்படும். வாங்குபவர் (பெறுபவர்) வாகனத்தை தன பெயருக்கு மாற்றிக்கொண்ட 14 நாட்களுக்குள், காப்பீடு பெயர்மாற்றம் செய்ய எங்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.வாடிக்கையாளர் இந்த காப்பீடை தன் பெயரிலுள்ள வேறு காருக்கு மாற்ற விரும்பினால், வாங்குபவருக்கு காப்பீடு மாற்றப்படாது. வாங்குபவர் (பெறுபவர்) ஒரு புதிய காப்பீட்டை வாங்க வேண்டும்.

ஒப்புதல் என்பது காப்பீட்டில் செய்யப்படும் ஒப்புதல் மாற்றத்தின் எழுதப்பட்ட சான்றாகும். இது ஒப்பந்த விதிகளின் படி மாற்றங்களை உள்ளடக்கிய ஆவணமாகும். ஒப்பந்தத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால், ஒப்பந்தத்தில் மாற்றத்தை அமல்படுத்த வாடிக்கையாளர் வாகன காப்பீடு நிறுவனத்தை அணுக வேண்டும். இது ஒரு ஒப்புதலின் மூலம் செய்யப்படுகிறது.

கூடுதல் நன்மைகள் மற்றும் தேவைகளை வழங்க (எ.கா., ஓட்டுனரின் சட்டபூர்வ பொறுப்பு) அல்லது கட்டுப்பாடுகள் விதிக்க (எ.கா., விபத்து சேத பாலிசி பிடித்தம்) பாலிசியை வெளியிடும்போது ஒப்புதல் வழங்கப்படலாம். அந்த ஒப்புதலின் வார்த்தைகள் அட்டவணையில் வழங்கப்படுகின்றன. முகவரியின் மாற்றம், பெயர் மாற்றம், வாகனத்தின் மாற்றம் போன்ற மாற்றங்களை பதிவு செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்படலாம்.

 • பிரீமியம் காசோலை
 • புதுப்பிக்கும் படிவம்
 • காப்பீட்டில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால், புதுப்பிப்பு பதில் வடிவத்தில் அதை வாடிக்கையாளர் இணைக்கலாம்.

தீவிபத்து, பூகம்பங்கள், புயல்கள், சூறாவளிகள், பெருங்காற்று, சுழற்காற்றுகள், வெள்ளம் அல்லது வெள்ளப்பெருக்கு, மின்னல் வெட்டு, வெடிப்பு, நிலச்சரிவுகள், வாகனங்கள் அல்லது விமானங்களின் மோதுதல் பாதிப்பு, தண்ணீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள் வெடித்து அல்லது நிரம்பி வழிதல் போன்ற இயற்கை சீற்றம் மற்றும் மனிதனால் ஏற்படும் பேரழிவுகளுக்கு உங்கள் வீட்டின் கட்டிடத்தையும் பொருட்களையும் வீட்டு காப்பீடு திட்டம் பாதுகாக்கிறது. உங்கள் வீட்டின் பொருட்கள்(நகைகளையும்) களவு காப்பீட்டின் கீழ் பாதுகாக்கிறது.

ஆமாம்

வீட்டு காப்பீடு பின்வரும் தீ விபத்து மற்றும் இதர ஆபத்துகளுக்கு காப்பீடு வழங்குகிறது:

 • தீ விபத்து, மின்னல், வெடிப்பு/ உள்வெடிப்பு, விமானங்களின் மோதுதல் சேதம்.
 • கலவரம், வேலைநிறுத்தம். தீங்கிழைக்கும் செயல் மற்றும் பயங்கரவாத சேதம்
 • தண்ணீர் தொட்டிகள், இயந்திரம், குழாய்கள் போன்றவை வெடித்தல் அல்லது நிரம்பி வழிதல்
 • பூகம்ப ஆபத்து, வெள்ளம் மற்றும் புயல் அபாயங்கள்
 • ரயில் / சாலை வாகன மற்றும் விலங்குகளின் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு
 • நிலம் உள்வாங்குதல் மற்றும் பாறைசரிவு உள்ளிட்ட நிலச்சரிவு
 • ஏவுகணை சோதனை நடவடிக்கைகள்
 • தானியங்கி தெளிப்பு நிறுவல்களில் இருந்து தண்ணீர் கசிவு
 • புதர் தீ

ஆமாம், களவு அல்லது கொள்ளை காரணமான நகை இழப்பிற்கு காப்பீடு வழங்கும், ஆனால் அதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு உண்டு

உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சொந்தமான உங்கள் வீட்டில் இருக்கும் 7 வருட காலத்திற்குட்பட்ட(மின்சார / மெக்கானிக்கல்) உபகரணம் மின்சாரம் அல்லது மெக்கானிக்கல் முறிவு ஏற்படும் சேதத்திற்கு பணம் செலுத்துவோம். அதனை நாங்கள் தேர்வு செய்யும்பொருட்டு பழுதுபார்த்து அல்லது மாற்றி தருவோம்.

நாங்கள் பின்வருவானவற்றுக்கும் இழப்பீடு வழங்குவோம் -

 • பழுதுபார்ப்புக்கான அகற்றும் மற்றும் நிறுவும் செலவு;
 • உபகரணங்களை மாற்றுவதற்காக செலுத்த வேண்டிய போக்குவரத்து செலவுகள், சுங்க வரிகள் மற்றும் இதர கட்டணம்;
 • இந்த செலவுகள் காப்பீட்டு தொகையில் சேர்க்கப்படும்

ஆமாம், மரணம், நிரந்தர முழு ஊனம் மற்றும் நிரந்தர பகுதி ஊனம். தற்காலிகமான முடக்கம் அனைத்துக்கும் காப்பீடு வழங்கப்படும்.

ஆமாம் மற்றும் அந்த பலன்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:

 • நிதியளிப்பாளருக்கு EMI(எளிதான மாதாந்திர தவணை) கொடுப்பது.
 • 30 நாட்களுக்கு கழித்து எந்தவொரு வேலைவாய்ப்பிலும்/ பணியிலும் நபர் ஈடுபட முடியாத போது .
 • குறைந்தபட்சம் 3 (மூன்று) நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது.
 • எங்கள் அதிகபட்ச பொறுப்பு 12 மாத தவணைகள்.
 • நோய் மற்றும் விபத்து காரணமாக முழு ஊனம்.

1855 ஆம் ஆண்டின் மரண அபாயச் சட்டத்தின் கீழ், தொழிலாளர் அமலாக்கச் சட்டம் 1923 அல்லது அதன் ஏதேனும் திருத்தமும் பொதுவான சட்டத்தின் கீழ்,பாலிசி காலகட்டத்தில் இந்த துணை பிரிவு தொடர்பான அட்டவணையில் குறிப்பிட்டுள்ள உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் உள்நாட்டு பணியாளருக்கு ஏதேனும் விபத்து மரணம், உடல் காயம், உடல்நலக்குறைவு அல்லது நோய்கள் ஏற்படும் போது இழப்பீடு வழங்கப்படும்.

ஒரு வாடகைதாரராக, நீங்கள் குடியிருக்கும் வீட்டில் குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் சட்டபூர்வமான பொறுப்புகளின் சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படும்.

  • காரணம் (பகுதி 1 மற்றும் 2)
  • பிரிவு 1 (தீ மற்றும் இதர ஆபத்துகள்) மற்றும் பகுதி 2 (இதர, வீட்டை உடைத்தல் மற்றும் இதர அபாயங்கள்)
 • கட்டிடம் மின் / நிறுவல், தரையில் / நிலத்தடி கேபிள்கள், கண்ணாடி / சுகாதார பொருத்துதல்கள் மற்ற சாதனங்கள், பொருத்துதல்கள்.
 • சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீடு மதிப்பிடப்படும்.

IDV என்பது, காப்பீடு செய்பவர் தெரிவிக்கும் தொகையை குறிக்கின்றது, இது வாகனத்தின் காப்பீட்டுத் தொகையாக கருதப்படுகிறது. வாகனத்தின் IDV என்பது உற்பத்தியாளர்களின் பிராண்ட் மற்றும் மாடலின் பட்டியலிடப்பட்ட விற்பனை விலையிலிருந்து வாகனத்தின் வயதின் அடிப்படையிலான மதிப்பிழப்பை கழித்து கிடைக்கும் தொகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

  ஒரு இழப்பீடு இல்லா வருடத்திற்கான போனஸ்(NCB) என்பது கார் காப்பீட்டின் பாலிசி காலத்தில் பாலிசிதாரர் இழப்பீடு ஏதும் கோராத பட்சத்தில் காப்பீடு நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு தள்ளுபடி ஆகும். பொதுவாக இது கார் காப்பீட்டின்  இழப்பீடு இல்லாத முதல் பாலிசி காலத்தில் 20%-ஆக தொடங்கி அதிகபட்சமாக 50% வரை செல்கிறது.

கூடுதல் பிரீமியம்(Loading)  என்பது பாலிசி காலத்தின் போது இழப்பீடு அதிகமாக இருந்தால், பாலிசி புதுப்பித்தல் நேரத்தில் செலுத்தப்படும் தொகையாகும் ஆகும்.

 உங்கள் வாகனத்தில் எச்சரிக்கை மணி எழுப்பும் கருவி நிறுவினால் தள்ளுபடி கிடைக்கும். அந்த சாதனம் ஆட்டோமொபைல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டு, அதன் நிறுவல் ஆட்டோமொபைல் அசோசியேஷன்களால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே தள்ளுபடி கிடைக்கும்.

இழப்பீடு செய்திருந்தால் கூடுதல் பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை, ஆனால் இழப்பீடு சதவிகிதம் அதிகமாக இருந்தால், நிறுவனத்தின் கொள்கையின்படி கூடுதல் பிரிமியம் வசூலிக்கப்படலாம். பாலிசியின் கீழ் பாலிசியின் கீழ் இழப்பீடு கோரியிருந்தால் நீங்கள் அனுபவித்திருக்கக் கூடும் இழப்பீடு இல்லா வருடத்திற்கான போனஸ்(NCB)  மட்டும் இழக்கிறீர்கள்.

ஒரு வாகனம் ஒரு விபத்தை சந்தித்து முழு இழப்பு ஏற்பட்ட பிறகு, அதாவது வாகனத்திற்கு அதன் முந்தைய நிலையை திரும்பக் கொண்டு வருவது சாத்தியமில்லாதபோது, சிதைந்துள்ள வாகனத்தின் மதிப்பே இழப்பு மீட்டெடுத்தல் ஆகும்.

குறிப்பிட்ட விலக்குகள்:

 • பாலிசியின் புவியியல் எல்லைக்கு வெளியேயான ஏதேனும் விபத்து
 • தொடர் விளைவாக ஏற்படும் இழப்பு, அன்றாட சேதம் மற்றும் தேய்மானம்
 • வாகனத்தின் பிரிவுக்கேற்ப செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
 • மது / போதை மருந்துகள் அருந்தி வாகனம் ஓட்டுதல்
 • வாகனம் பயன்படுத்துவதற்கான வரம்புகளின்படி பயன்படுத்தப்படவில்லை
 • இயந்திர அல்லது மின்சார பழுது, செயலிழப்பு போன்றவை குறிப்பிட்ட விலக்குகளின் கீழ் வருகின்றன
 • வேண்டுமென்றே செய்யப்படும் பாதிப்பு, வாடகை அல்லது வெகுமதி
 • அதே நேரத்தில் வாகனமும் சேதமடைந்தால் அல்லது வாகனம் திருடப்பட்டிருந்தா, டயர்கள் மற்றும் குழாய்களுக்கு ஏற்படும் சேதம்

பொது விலக்குகள்:

 • கதிரியக்க கலப்படம், அணுக்கரு பிளவு, போர் படையெடுப்பு.

 கீழ்க்கண்ட வரைமுறைக்குள் நீங்கள் இழப்பீடு கோரலாம்

 • அந்த வாகனத்திற்கான காப்பீட்டு பாலிசி இருக்க வேண்டும்,
 • கார் ஓட்டுநருக்கான பிரீமியம் செலுத்தியிருந்தால் அல்லது கார் உங்கள் அனுமதியுடன் ஓட்டப்பட்டிருந்தால், இது அளிக்கப்படும்.
 • காரை ஓட்டும் நபர் முறையாக உரிமம் பெற்றிருத்தல் மற்றும் வாகன ஓட்டுநரின் இருக்கையில் இருப்பவர் உட்பட இருக்கை எண்ணிக்கை அடிப்படையில் பிரீமியம் பெறப்படுதல்.

சேதம் சிறியதாக இருந்தால், இழப்பீடு கோரிக்கை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையில், சிறிய சேதங்களுக்கு இழப்பீடு கோருவது நல்லதல்ல, ஏனெனில் நீங்கள் தேய்மானம் மற்றும் பாலிசி பிடித்தம் கட்டணத்தை செலுத்துவதினால், இழப்பீடு தொகையும் இன்னும் குறையும், ஆனால் நீங்கள் புதுப்பிக்கும் நேரத்தில் உங்கள் இழப்பீடு இல்லா வருடத்திற்கான போனஸ்(ஏதேனும் இருந்தால்) இழப்பீர்கள். இருப்பினும், ஒருமுறை நீங்கள் இழப்பீடு செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த பின், பிற்பாட்டு நிலையில் இந்த சேதங்களை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்

நீங்கள் விண்ட்ஸ்கிரீன் கண்ணாடிக்காக முழு தொகையையும் திரும்பப் பெறுவீர்கள். எனினும், ரப்பர்  லைனிங் மற்றும் சீலண்ட் மீது 50% தேய்மானம்  இருக்கும். கூடுதலாக, நீங்கள் பாலிசி பிடித்தம் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்

சில சமயங்களில் காப்பீட்டு நிறுவனத்தால் எந்த ஒரு இழப்பீடும் நிராகரிக்கப்படலாம். இழப்பீடு நிராகரிக்கப்படுவதற்கான சில பொதுவான காரணங்கள்:

 • பாலிசி காலாவதியாகியுள்ளது, அல்லது பாலிசி இரத்து செய்யப்பட்ட்டுள்ளது அல்லது பிரீமியம் காசோலைக்கு பணம் மறுக்கப்பட்டுள்ளது ஆகியவை பாலிசியை செல்லாததாக்கும்.
 • விபத்து அல்லது இழப்பு தேதி பாலிசி காலகட்டத்திற்கு வெளியே இருக்கலாம் அல்லது
 • விபத்து நேரத்தில் வாகனம் ஓட்டும் நபர் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்கவில்லை அல்லது அவர் போதை மருந்துகள் அல்லது மது ஆதிக்கத்தில் இருந்திருந்தார்.
 • வாகனத்தின் உரிமையாளர் மாறியுள்ளார் ஆனால் காப்பீட்டு நிறுவனத்திற்கு அத்தகைய மாற்றம் 14 நாட்களுக்குள் தெரிவிக்கப்படவில்லை அல்லது சேதாரங்கள் பாலிசி தொடங்குவதற்கு முன்னரே இருந்துள்ளது.
 • விபத்துக்களின் தன்மை விபத்துக்கான காரணத்துடன் பொருந்தவில்லை அல்லது வாகனம் தனிப்பட்ட அல்லது சமூக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை போன்ற வேறு சில காரணங்கள் இருக்கலாம்.

இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு  நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தேசிய தலைநகரத்தின் ஒரு பகுதியான குருகிராமில் உள்ளது. அதன் தபால் முகவரி பின்வருமாறு:

இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் லிமிடெட்.

இப்கோ-டோக்கியோ கோபுரம் 

4 வது & 5 வது மாடி,

இடக்குறியீட்டு எண் 3, பிரிவு - 29,

குருகிராம் - 122001, ஹரியானா

காப்பீட்டாளர் என்பது காப்பீட்டு நிறுவனத்தை குறிக்கிறது.

காப்பீட்டுதாரர் என்பது இழப்பு அல்லது சேதம் ஏற்படும் போது காப்பீட்டின் மூலம் பயனடையும் நபர் ஆவார்.

இப்கோ-டோக்கியோ, இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு (IFFCO) மற்றும் மற்றும் ஜப்பானின் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய  காப்பீட்டுக் குழுவான டோக்கியோ மரைன் மற்றும் நிக்கிடோ ஃபயர் குழு இடையேயான கூட்டு ஸ்தாபனமாகும். இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் இந்தியா முழுவதும் 63 'வியாபார உத்தி கிளைகளை(SBU's) கொண்டுள்ளது.  மேலும் 120 க்கும் மேற்பட்ட பக்கவாட்டு பரவல் மையங்கள்(LSCs) மற்றும் 255 காப்பீடு மையங்கள்(BK) கொண்டு பெரிய பிணைப்பை கொண்டுள்ளது.

IRDAI(காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) இந்தியாவில் இருக்கும் காப்பீட்டுத் துறையை மேற்பார்வையிடும் தலைமையகமாகும். இதன் முக்கிய நோக்கங்கள் பாலிசிதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதோடு, காப்பீட்டுத் தொழிலை ஒழுங்குபடுத்துவதும் ஆகும்

பிரிமியம் ஒரு காப்பீடு வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை குறிக்கிறது. பிரிமியம்  செலுத்துதல் என்பது  மாதாந்திரம் முதல் காலாண்டு வரை ஆண்டுதோறும் மாறுபடும் அல்லது பிரிமியம் ஒரு முறை கட்டணமாக இருக்கலாம்

காப்பீடு என்பது எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்வதற்கு வழங்கப்படும் இழப்பீடு ஆகும். காப்பீட்டு திட்டங்கள் ஆபத்துகளை தனிப்பதுமட்டுமல்லாமல், நிதி சுமைகளை குறைப்பதற்கு ஏதுவாக நிதி சலுகைகள் வழங்குவதன் மூலம் உங்களுக்கு உதவுகிறது. 

விபத்துகள் ... நோய் ... தீ விபத்து ... நிதி பத்திரங்கள் என்பது நீங்கள் எந்த நேரத்திலும் கவலைப்பட வேண்டிய விஷயங்கள்.இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்களுக்கு பொது காப்பீடு உங்களுக்கு மிகவும் தேவையான பாதுகாப்பு அளிக்கிறது. ஆயுள் காப்பீடு போலல்லாது, பொது காப்பீடு உங்களுக்கு லாபத்தை வழங்குவதற்கானது அல்ல, ஆனால் அது எதிர்பாராத நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதற்காகும். சில பாராளுமன்ற சட்டத்தின் கீழ், மோட்டார் காப்பீடு மற்றும் பொதுப் பொறுப்பு காப்பீடு போன்ற சில வகையான காப்பீடு கட்டாயமாக்கபட்டுள்ளது.

ஆமாம், வாகன காப்பீடு இந்தியாவில் கட்டாயமாகும். கட்டாய பொறுப்பு காப்பீடு என்பது மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988 இன் கீழ் ஒரு சட்டபூர்வமான தேவையாகும். எனினும், உங்கள் நிதி பொறுப்புகளை குறைக்க ஒரு விரிவான பாலிசியை  நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

காப்பீடு என்பது தேவைகளின் படி வாங்கவேண்டிய விஷயமாகும். IRDAI காப்பீடுகளை பின்வருவனவற்றில் மூலம் விற்க அனுமதிக்கிறது:

தளங்கள்

 • நிறுவனத்தின் வலைத்தளங்கள்
 • தொலைபேசியில் வாங்குதல். அது தனிப்பட்ட நிறுவனத்தை சார்ந்திருக்கிறது
 • காப்பீட்டு நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர்கள்
 • காப்பீட்டு தரகர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனம் தயாரிப்புகளை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர், வங்கிகள், சில்லறை வீடுகள் அல்லது மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் பங்குதாரராக இருக்கும் வணிக நிறுவனங்கள்.

செயல்முறை

 • மேலே கூறப்பட்ட சேனல்களின் வழியாக, முறையாக நிரப்பப்பட்ட முன்மொழிவு படிவத்துடன் காப்பீட்டு நிறுவனத்தை அணுகவும்
 • உங்கள் தேவையை ஏற்றுக்கொள்ளும் நோக்கத்தில் நிறுவனத்தின் அங்கீகாரத்தை கோருங்கள். (அதாவது உங்கள் ஆபத்து மற்றும் இடர்பாடுகளை மதிப்பீடு செய்தல். ஆபத்துகளை ஏற்றுக்கொள்வதா என்பதை முடிவு செய்யும் நிறுவனம் எவை என்பதன் அடிப்படையிலும், எந்த பிரீமியத்தின் விகிதத்தில் அவ்வாறான முடிவுகளை எடுப்பது என்றும் முடிவு செய்யும்).
 • பிரீமியம் மற்றும் அதன் தொடர்புடைய பிற விவரங்களை கோருங்கள்
 • பிரீமியம் செலுத்தி, பிரீமியம் ரசீது மற்றும் ஆதரசீட்டு/ இடர் குறிப்பு ஆகியவற்றை எடுத்துக் செல்லுங்கள்
 • ஆவணங்களுக்காக காத்திருக்கவும்
 • ரசீதில் சரியாக குறிப்பிட்டுள்ளதா என சரிபார்த்து, பாலிசி காலாவதியாகும் தேதி வரை கவனமாக சேமித்து வைக்கவும்
 • பாலிசி காலாவதிக்கு முன்னர், நீங்கள் சரியான நேரத்தில் பாலிசியை புதுப்பிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

ஆபத்துகள் எழுத்துறுதி என்பது, முடிவு எடுப்பதற்கான அடிப்படையில் பொருள் உண்மைகளை கருத்தில் கொள்வது.அபாயத்தை ஏற்றுக்கொள்வதா அல்லது அவ்வாறு ஏற்றுக்கொண்டால் அவற்றின்  பிரீமிய விகிதம் என்ன என்பது போன்றவை.

பொதுவாக பொது காப்பீட்டு திட்டங்கள் ஒரு வருட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.

முகவர்கள் காப்பீட்டு நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் மற்றும் அந்த காப்பீட்டு நிறுவனத்தின் தயாரிப்புகளை மட்டுமே விற்கிறார்கள். காப்பீட்டு தரகர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசியை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Download Motor Policy

Feedback