PrintPrintEmail this PageEmail this Page

உங்கள் இல்லம், தொழிற்சாலை, பங்குகள் மற்றும் பிற உள்ளடக்கங்கள் நெருப்பு அல்லது நீர் மூலம் சேதமடைந்தால், அது வெள்ளம் அல்லது நீர் அணைத்தல் என ஏதுவாக இருந்தாலும், அவற்றினால் ஏற்படும் நிதி இழப்புகளிலிருந்து நீங்கள் பாதுகாப்பு பெற்றுள்ளீர்களா? எதிர்பாராத சம்பவங்கள் உங்கள் கனவுகளை அழிக்க வேண்டாம்.

கொதி கலன் மற்றும் அழுத்த ஆலை(BPP) காப்பீடு

கொதிகலன் மற்றும் அழுத்தம் ஆலை (BPP) காப்பீட்டு பாலிசியானது, நீராவி மூலம் வேலை செய்யும் அனைத்து வகையான கொதிகலன்கள் மற்றும் / அல்லது பிற அழுத்தம் ஆலைகளுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு காப்பீடு வழங்குகிறது.  இந்த பாலிசி, காப்பீடு செய்யப்பட்ட அனைத்து வகையான கொதிகலன்கள் மற்றும்/ அல்லது பிற அழுத்தம் ஆலைகளின் பொருட்க வெடிப்பு அல்லது பழுது காரணமாக ஏற்படும் எதிர்பாராத மற்றும் திடீர் இழப்பு அல்லது சேதத்திற்கு இழப்பீடு அளிக்கிறது. மேலும் தெரிந்துகொள்ள »

தொடர் விளைவுகளினால் ஏற்படும் இழப்பு (தீ விபத்து) காப்பீடு

தொடர் விளைவுகளினால் ஏற்படும் இழப்பு (தீ விபத்து) காப்பீடானது, தீ மற்றும் இதர காரணிகள் பாலிசி கீழ் காப்பீடு அளிக்கப்பட்ட, அபாயங்களினால், வருவாய்/தயாரிப்பு குறைப்பு காரணமாக ஏற்படும், ஒட்டு மொத்த இலாப இழப்பு மற்றும்/அல்லது வேலை செலவு அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிரான காப்பீடுகளை வழங்குகிறது. மேலும் தெரிந்துகொள்ள »

ஒப்பந்ததாரர்களின் அனைத்து ஆபத்து காப்பீடு

பல்வேறு சிவில் பொறியியல் புராஜக்ட்களில் (வீடு, அலுவலகம், மருத்துவமனைகள், சுரங்கங்கள், கால்வாய்கள் முதலியவை) ஏற்படும் சேதம் அல்லது அழிவிற்கு எதிராக சிவில் ஒப்பந்ததாரர்களின் நலனை பாதுகாப்பதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஒப்பந்தக்காரர்களுக்கும் உரிமையாளருக்கும் இடையிலான ஒப்பந்த விதிமுறைகளின் கீழ், ஒப்பந்ததாரர்களின் பொறுப்பிலுள்ள பாராமரிப்பு காலத்தில் கட்டுமான தளத்தில், சிவில் கட்டுமான வேலைகள், ஒப்பந்தகாரர்களின் ஆலைகள் மற்றும் இயந்திரங்களில் ஏற்படும் எதிர்பாராத சேதத்தை இந்த பாலிசி உள்ளடக்குகிறது. மேலும் தெரிந்துகொள்ள »

ஒப்பந்ததாரர்களின் தொழிற்சாலை மற்றும் இயந்திர காப்பீடு

பல்வேறு சிவில் பொறியியல் திட்டங்களுக்கு (வீடுகள், அலுவலகம், மருத்துவமனைகள், சுரங்கங்கள், கால்வாய்கள் போன்றவை) ஏற்படும் சேதம் அல்லது அழிவிற்கு காப்பீடு வழங்கி, சிவில் ஒப்பந்தக்காரர்களின் நலன்களை பாதுகாக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  கட்டுமான தளத்தில் சிவில் கட்டுமான பணிகள், ஒப்பந்ததாரர் தொழிற்சாலைகள் மற்றும் இயந்திரங்களுக்கு ஏற்படும் எதிர்பாராத சேதம் மற்றும் சேதம்/குறைபாடு போன்றவையும், பராமரிப்பை தொடர்ந்து பின்னர் வரும் காலத்தில், ஒப்பந்தக்காரர் மற்றும் ஒப்பந்தத்திற்கும் இடையில் உள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் ஒப்பந்தக்காரர் பொறுப்பேற்க கடமைப்பட்டிருக்கும் வேலையில் ஏற்படும் இழப்புகள் இந்த திட்டங்களில் அடங்கும். மேலும் தெரிந்துகொள்ள »

மின்னணு சாதனங்கள் காப்பீடு

மின்னணு சாதன காப்பீட்டுத் திட்டமானது மென்பொருள் அமைப்பின் மதிப்பு உட்பட கம்ப்யூட்டர்கள், மருத்துவ, உயிரியல் மருத்துவ, நுண்செயலி மற்றும் ஆடியோ/காட்சி சாதனம் ஆகியவற்றுக்காக வடிவமைக்கப்பட்ட அனைத்து ஆபத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு பாலிசியாகும்.கட்டண விகிதங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் தெரிந்துகொள்ள »

தொழில்துறை அனைத்து ஆபத்துக்கான காப்பீடு

இந்த பாலிசியானது, இழப்புக்கள் மற்றும் சேதங்களை மட்டுமல்லாமல், தற்செயலாக எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்பு அல்லது சொத்து சேத, விளைவாக ஏற்படும் வணிக குறுக்கீட்டின் தொடர் சேதத்திற்கு காப்பீடு வழங்குகிறது. மேலும் தெரிந்துகொள்ள »

இயந்திரம் பழுது காப்பீடு

இந்த காப்பீடானது, பழுது மற்றும்/அல்லது மாற்றத்தை வலியுறுத்தும் ஏதேனும் காரணத்தினால், ஏதேனும் இயந்திர மற்றும் மின்சார இயந்திரங்கள் மற்றும்/அல்லது உபகரணங்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடு வழங்குகிறது. மேலும் தெரிந்துகொள்ள »

இலாப காப்பீட்டின் இயந்திர இழப்பு

ஏதேனும் இயந்திரத்தின் தற்செயலான கோளாறின் தவிர்க்க முடியாத பின்விளைவாக காப்பீட்டாளர் பாதிக்கப்படும் பின்விளைவுள்ள இழப்பை இயந்திர இலாப இழப்பு கவர் செய்கிறது. மேலும் தெரிந்துகொள்ள »

நிலையான தீ மற்றும் சிறப்பு ஆபத்துக்கள் காப்பீடு

நம்பிக்கை அல்லது அதிகாரமளிப்பின் பேரில் சொத்தை வைத்திருக்கும் உரிமையாளர், சொத்து மீது நிதி ஆர்வம் கொண்டுள்ள தனிநபர்கள்/நிதி நிறுவனங்கள் தீ காப்பீட்டுத் திட்டம் பெற பொருத்தமானவர்கள். சப்ளையர்கள்/ வாடிக்கையாளரின் வளாகங்களில் உள்ள பொருட்கள் மற்றும் பழுது பார்ப்புக்காக வளாகங்களில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட இயந்திரங்கள் உட்பட, நம்பிக்கை அல்லது அதிகாரமளிப்பின் பேரில் உள்ள பொருட்களுடன் சேர்த்து கட்டிடங்கள் போன்ற குறிப்பிட்ட வளாகங்களில் அமைந்துள்ள அனைத்து அசையா மற்றும் அசையும் சொத்து, ஆலை மற்றும் இயந்திரம், பார்னிச்சர்கள், சமான்கள், பொருத்தும் சாதனங்கள் மற்றும் பிற பொருட்கள் அனைத்திற்கும் காப்பீடு செய்யலாம். மேலும் தெரிந்துகொள்ள »


Download Motor Policy

Feedback