PrintPrintEmail this PageEmail this Page

இப்கோ-டோக்கியோ, பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் அல்லது விபத்து ஏற்படும் போது மருத்துவமனை அல்லது மருத்துவ செலவினங்களுக்கு இழப்பீடு வழங்குகிறது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப, உங்கள் காப்புறுதிகளை தேர்வு செய்யும் வசதி உள்ளது, கொடிய நோய் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலமாக நடைபெறக்கூடிய அறுவை சிகிச்சை மற்றும் 24 மணிநேரதிற்கு குறைவாக மருத்துவமனையில் தேவைப்படும் சிகிச்சை நடைமுறைகள் போன்றவற்றுக்கும் நாங்கள் காப்பீடு வழங்குகிறோம்.

குழு மருத்துவ காப்பீடு

50 நபர்கள்/குடும்பங்களை கொண்ட ஏதேனும் குழு/ சங்கம் / நிறுவனம் / பெருநிறுவனங்கள மைய நிர்வாக அமைப்பினை கொண்டிருந்தால் குழு மருத்துவ காப்பீடு கிடைக்கப்பெறும். குழு காப்பீடானது IRDAI விதிமுறைகளுக்குட்பட்டு குழு / சங்கம் / நிறுவனம் / பெருநிறுவனம் (பாலிசிதாரர் எனப்படுவர்) போன்றவற்றின் பெயரில், ஆன்/ பெண் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரின் பெயர் அடங்கிய அட்டவணையுடன் வழங்கப்படும். மேலும் அறியவும்

குழு விபத்து காப்பீடு

வெளிப்புற, வன்முறை மற்றும் காணக்கூடிய ஒரு விபத்து காரணமாக உடல் ரீதியாக காயத்தினால் அவதிப்படும் காப்பீடு செய்த நபருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே ஏதேனும் வியாதி அல்லது நோய் காரணமாக ஏற்படும் மரணம் அல்லது காயம் இந்த பாலிசியில் கவர் செய்யப்படுவதில்லை. மேலும் அறியவும்


Download Motor Policy

Feedback