PrintPrintEmail this PageEmail this Page

ஒரு காப்பீடு முகவராவது எப்படி:

தகுதி :

  • இந்திய குடிமகன்.
  • 18 வயது இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்ச கல்வி தகுதி:
    • I  I ஊரகம் : - 10 வது தேர்ச்சி. (கிராமப்புற ஆதாரம் தேவை. இது BDO அல்லது சர்பான்ச் மூலம், அந்த நபர் 5000 க்கும் குறைவான குறைந்த மக்கள் வாழும் ஒரு குறிப்பிட்ட கிராமத்தை வசிப்பிடமாக கொண்டிருக்கிறார் என்று கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கப்படவேண்டும்)
    • II  II நகரம்: - 12 வது தேர்ச்சி
  • நிரந்தர கணக்கு எண்(PAN)
  • ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது, அவர்/அவருடைய உறவினர் அந்த நிறுவனத்தில் எந்தவொரு பதவியிலும் பணியாற்றக்கூடாது.("உறவினர்" என்பது மனைவி, சார்புடைய பிள்ளைகள், அல்லது சார்புடைய வளர்ப்பு பிள்ளைகள், பணியாளருடன் வசித்தாலும், வசிக்கவில்லை என்றாலும் அடங்கும்)
  • அந்த நபர் பிற பொது காப்பீட்டு நிறுவனத்தினிடமிருந்து முகவர் உரிமம் பெற்றிருக்க கூடாது. (ஆயுள் காப்பீட்டு முகவர்கள் கூட்டு செயல்முறையை பின்பற்ற வேண்டும்)

தேவையான ஆவணங்கள்:

  • முகவர் விண்ணப்ப படிவம்.
  • பொறுப்பேற்பு படிவம்.
  • பிறந்த தேதி சான்று.
  • தகுதி சான்று.
  • நிரந்தர கணக்கு எண்(PAN)
  • மூன்று முத்திரை அளவு புகைப்படங்கள்.
  • முகவரி ஆதாரம்.
  • அலைபேசி எண்.
  • மின்னஞ்சல் முகவரி.
  • Pjpg வடிவத்தில் புகைப்படம் மற்றும் கையொப்பம் இருக்க வேண்டும். (கோப்பு அளவு புகைப்படத்திற்கு 50 kb குறைவாகவும் மற்றும் கையொப்பதிற்கு 10 kb குறைவாகவும் இருக்க வேண்டும்).

IRDAI பயிற்சி:

காப்பீட்டு முகவராக செயல்படுவதற்கான உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், பொது காப்பீட்டு பாடத்திட்டத்தில் IRDAI-அனுமதிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 50 மணிநேர நடைமுறை பயிற்சி பெற வேண்டும், இது ஒரு வாரமாக இருக்கலாம். தனது உரிமத்தை புதுப்பிப்பதற்கு, முகவர் 25 மணிநேரங்களுக்கு மட்டும் பயிற்சி பெற்றால் போதும். பயிற்சி செலவினை இப்கோ - டோக்கியோ ஏற்றுக்கொள்ளும்.

IRDAI தேர்வு:

IRDAI பயிற்சி வெற்றிகரமாக முடிந்தபின், விண்ணப்பதாரர் முகவர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வு கட்டணம் ரூ. 350.௦௦. அது முகவரால் செலுத்தப்பட வேண்டும். DD யானது தேர்வு அதிகாரியின் பெயரில் இருக்க வேண்டும். அதாவது,தேர்வுக்குப் பிறகு, தேர்வு மையம் மதிப்பெண் பட்டியலை விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்கும்.

உரிமம் வழங்குவதற்கு தேர்வு பெற்ற விண்ணப்பதாரரிடமிருந்து பின்வரும் ஆவணங்கள் தேவை:

  • படிவம் விஏ
  • முகவர் ஒப்பந்தம்
  • மதிப்பெண் பட்டியல் நகல் (தேர்வு மையத்தால் வழங்கப்பட்டது)
  • உரிமம் கட்டணம் (இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் என்ற பெயரில் விண்ணப்பதாரரிடம் இருந்து 250.00 ரூபாய் காசோலையாக)

Download Motor Policy

Feedback