PrintPrintEmail this PageEmail this Page

நீங்கள் பொது காப்பீட்டு நிறுவனத்தில் ஏன் முகவாராக சேர வேண்டும்?

நிதி சேவைத் துறைக்கு வெளியே உள்ள சில தொழிற்சாலைகள் தொழில் வல்லுநருக்கு ஒரு சில வருடங்களிலேயே கணிசமான வருமானத்தை வழங்குகின்றன. நிதி சேவை துறையினுள் கூட, பொது காப்பீட்டு முகவராக இருப்பதால் விரைவான மற்றும் பெரிய வருவாய்க்கான வாய்ப்பையும் இந்த தொழில் வழங்குகின்றன. உண்மையிலேயே, கடின உழைப்பை கொண்ட ஒரு காப்பீடு முகவர், தனது முதல் வருட விற்பனையில், 200,000 ரூபாய்க்கு அதிகமாக சம்பாதிக்கலாம். அதிக ஆற்றல் உள்ளவரும், உறவுகளை உருவாக்குவதில் சிறந்தவரா நீங்கள்? இந்தத் துறை உங்களுக்கானது.

இந்தியாவில் பொது காப்பீட்டுத் துறை மேல்நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளிலேயே இந்த தொழில்துறை வளர்ச்சியடைந்துள்ளது. இது வரை யாரும் அணுகிடாத குறிப்பாக மெட்ரோ அல்லாத நகரங்களில் மற்றும் இடைநிலை நகர்ப்புற பகுதிகளில் வணிகம் செய்வதர்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. ஆயுள் அல்லாத காப்பீட்டுத் தேவையும் சந்தையில் அதிகரித்து வருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தன்னிச்சையாக காப்பீட்டு கட்டணத்தை நிர்ணயம்செய்தல் - இதில் பொது காப்பீட்டு நிறுவனங்கள், பிரீமிய தொகையை தாங்களே நிர்ணயித்து, தள்ளுபடி மற்றும் காப்புறுதிகளை வழங்குவதன் மூலம், இந்தத் துறைக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது.

பல வகையான பொது காப்பீடுகள் இருந்தாலும், காப்பீட்டு துறையில் சிறந்த பணம் சம்பாதிப்பது, வாகன மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டங்களேயாகும். இந்த காப்பீட்டு விற்பனையில் கவனம் செலுத்துகின்ற முகவர்கள், பாலிசிதாரருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும்போது அல்லது வாகனத்திற்கு சேதம் ஏற்படும்போது, அவர்களது குடும்பங்கள், தொழில்கள், முதலாளிகள் மற்றும் பிற தரப்பினரை நிதி இழப்புக்கு ஈடு செய்ய உதவுகிறார்கள்.

வழக்கமாக காப்பீட்டு முகவர்கள், புதிய அல்லது கூடுதல் காப்பீடு தேவைப்படும் நபர்களை அடையாளம் கண்டு, இப்கோ டோக்கியோவின் விலைப்பட்டியலை அவர்களுக்கு வழங்கி, பின்னர் அவர்களை புதிய காப்பீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இணங்க வைப்பதற்காக, சில வகையான சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளில் தங்கள் பெருமளவு நேரத்தை செலவு செய்வர்.

பொதுவாக, ஒரு பொது காப்பீட்டு முகவர் முதல் ஆண்டில் மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில், வாடிக்கையாளர் செலுத்திய தொகையில்(பிரீமியம் என்றும் அழைக்கப்படுகிறது) 10% பெறுவார்.

ஒரு உதாரணம் பார்க்கலாம்: -

ராம் - காப்பீட்டு முகவர் தனது வாடிக்கையாளர் வாகனத்துக்கு ஒரு வருடத்திற்கான வாகன காப்பீடை விற்கிறார். ராமின் காப்பீட்டு நிறுவனம் பாலிசி ப்ரீமியத்தில் 10% கமிஷனை செலுத்துகிறது. அதாவது விற்பனை செய்யும் முகவர் முதல் ஆண்டு பிரிமியத்தின் 10% மற்றும் வருங்கால புதுப்பிப்புகளில் 10% கமிஷனும் பெறுவார்.

இந்த பாலிசியிக்காக வருடத்திற்கு 10000 ரூபாய் வாடிக்கையாளருக்கு செலவாகும்.எனவே, முதல் ஆண்டில், ராம் இந்த வாகன காப்பீட்டு பாலிசியிக்காக விற்றதற்காக 1000 ரூபாய் (ரூ. 10,000 x 10%) கமிஷனை பெறுவார். அடுத்தடுத்த அனைத்து ஆண்டுகளில், வாடிக்கையாளர் தொடர்ந்து பிரிமியம் செலுத்தி புதுப்பிக்கும் வரை, ராம் அதே 10 % கமிஷனை பெறுவார்.  இந்த நிலையில் ஒவ்வொரு வாரம் ஒன்று அல்லது இரண்டு காப்பீட்டு பாலிசிகளை ராம் விற்பனை செய்தால், தனது முதல் வருடத்தியேயே ஒரு முகவராக 50,000 ரூபாய் முதல் 100,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.


Download Motor Policy

Feedback